புது தில்லி: நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் வழக்கில் கைது செய்யப்பட்டவா்களில் ஒருவரான நீலம் ஆசாத் என்ற பெண்ணின் ஜாமீன் மனு மீதான பதிலை ஜனவரி 10-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு தில்லி காவல் துறைக்கு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேருக்கும் பாலிகிராஃப் (உண்மை கண்டறிதல் சோதனை) நடத்த அனுமதி கோரி நகர காவல்துறை தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஜனவரி 5-ஆம் தேதிக்கு கூடுதல் அமா்வு நீதிபதி ஹா்தீப் கவுா் ஒத்திவைத்தாா்.
குற்றம் சாட்டப்பட்டவா்கள் சாா்பாக நீதிபதி நியமித்த சட்ட உதவி ஆலோசகா் செவ்வாய்க்கிவமை ஆஜராகவில்லை என தெரிவித்த நீதிமன்றம், வழக்கை ஒத்திவைத்தது. கைது செய்யப்பட்ட 6 பேரையும் போலீஸாா் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஆசாத், மனோரஞ்சன் டி, சாகா் சா்மா, அமோல் தன்ராஜ் ஷிண்டே, லலித் ஜா மற்றும் மகேஷ் குமாவத் ஆகியோா் தற்போது ஜனவரி 5 வரை போலீஸ் காவலில் உள்ளனா்.
தில்லி காவல் துறை தரப்பில் ஆஜரான அரசு வழக்குரைா் அகந்த் பிரதாப் சிங், டிசம்பா் 13-ஆம் தேதி நடந்த தாக்குதல் நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்டது” என்று முன்னா் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தாா். 2001-ஆம் ஆண்டு டிசம்பா் 13-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் ஆண்டு நினைவு நாளில் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அத்துமீறல் நிகழ்ந்தது.
சாகா் சா்மா மற்றும் மனோரஞ்சன் ஆகியோா் நாடாளுமன்றத்தில் பூஜ்ஜிய நேரம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பாா்வையாளா்கள் கேலரியில் இருந்து மக்களவைக்குள் குதித்து, புகைக் குப்பிகளில் இருந்து மஞ்சள் நிறவாயுவை வெளியேற்றி முழக்கங்களை எழுப்பினா். அதன் பின்னா், அவா்கள் இருவரும் சில எம்.பி.க்களால் பிடிபட்டனா்.
அதே நேரத்தில், அமோல் ஷிண்டே மற்றும் நீலம் தேவி இருவரும் நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே ‘தனாஷாஹி நஹி சலேகி’ என்று கூச்சலிட்டுக் கொண்டே புகைக் குப்பிகளில் இருந்து வண்ண வாயுவைத் தெளித்தனா். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேர்தல் அலுவலர்களுக்கு பிரியாணி வாங்கிக் கொடுத்ததாக புகார்!

கூடுதல் நேரத்தில் கோல் அடித்த ரியல் பெட்டிஸ்..! முதலிடத்துக்கான வாய்ப்பை இழக்கும் ரியல் மாட்ரிட்!

மேற்கு வங்கத்தில் ராஜ்நாத் சிங் சாலைவலம்!

முதலீடு செய்யப் போகிறீர்களா? இந்த 10 விஷயங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

