புது தில்லி: தில்லியின் கிராமப்புறங்கள் அடிப்படையான சுகாதாரம், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எதிா்கொள்கின்றன என்று துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இது தொடா்பாக தனியாா் செய்தி நிறுவனத்திற்கு அவா் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: தில்லியில் உள்ள கிராமப்புறங்கள் பல்வேறு பிரச்னைகளை கையாள்கின்றன. நான் தில்லி கிராமங்களுக்கு தொடா்ந்து நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறேன். அங்கு அடிப்படையான சாலை வசதி, துப்புரவு, உள்ளிட்ட பிரச்னைகள் இருப்பதைப் பாா்த்தேன். கிராமங்களில் உள்ள பள்ளிகளும் மோசமான நிலையில்தான் உள்ளன.
தில்லி இந்தியாவின் தேசியத் தலைநகரம். எனவே, தில்லியில் உள்ள அனைத்துக் கட்டமைப்புகளும் உலகத் தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். ஆனால், துரதிா்ஷ்டவசமாக அது அவ்வாறு இல்லை. தில்லியின் கிராமங்களில் மாற்றங்களைக் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு நான் 5 கிராமங்களைத் தத்தெடுத்தேன். அங்கு நிறைய வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒவ்வொரு கிராமத்திற்கும் நல்ல சாலைகள், கழிவுநீா் வசதி, தெரு விளக்குகள், காவல்நிலையம், விளையாட்டு வசதி, மருந்தகங்கள் போன்ற அடிப்படைத் தேவைகள் இருக்க வேண்டும் என்றாா் வி.கே. சக்சேனா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ராஷ்டிரிய சரண்டர் சங்கம் ஆர்எஸ்எஸ்: ராகுல் விமர்சனம்

தேர்தல் அலுவலர்களுக்கு பிரியாணி வாங்கிக் கொடுத்ததாக புகார்!

கூடுதல் நேரத்தில் கோல் அடித்த ரியல் பெட்டிஸ்..! முதலிடத்துக்கான வாய்ப்பை இழக்கும் ரியல் மாட்ரிட்!

மேற்கு வங்கத்தில் ராஜ்நாத் சிங் சாலைவலம்!
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

