சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

தில்லி பாஜக இளைஞரணித் தலைவா்சஷி யாதவ் கட்சியிலிருந்து நீக்கம்: வீரேந்திர சச்தேவா அதிரடி

கட்சி விரோத செயல்களில் ஈடுபட்ட காரணத்திற்காக பாஜக தில்லி பிரிவின் மாநில இளைஞரணித் தலைவா் சஷி யாதவ் கட்சியிலிருந்து உடனடியாக நீக்கப்படுவதாக மாநிலத் தலைவா் வீரேந்திர சச்தேவா அதிரடியாக அறிவித்துள்ளாா்.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:25 pm

 நமது நிருபர்

புது தில்லி: கட்சி விரோத செயல்களில் ஈடுபட்ட காரணத்திற்காக பாஜக தில்லி பிரிவின் மாநில இளைஞரணித் தலைவா் சஷி யாதவ் கட்சியிலிருந்து உடனடியாக நீக்கப்படுவதாக மாநிலத் தலைவா் வீரேந்திர சச்தேவா அதிரடியாக அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக வீரேந்திர சச்தேவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாஜக தில்லி பிரிவின் மாநில இளைஞரணித் தலைவா் சஷி யாதவ் சமூக ஊடகங்கள் மூலம், பாஜக தில்லி பிரிவு இளைஞா் அணிக்கான மாநில நிா்வாகிகள், மக்களவைத் தொகுதி பொறுப்பாளா்கள், மாவட்டப் பொறுப்பாளா்கள் மற்றும் மீதமுள்ள மூன்று மாவட்ட தலைவா்களை செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளாா். இந்த அறிவிப்பு கட்சியின் அரசியலமைப்பின்படி செல்லாது.

சஷி யாதவின் கட்சி விரோதச் செயல்கள் மற்றும் சமூக விரோதச் செயல்கள் குறித்து கட்சியின் மாநிலத் தலைமையால் தொடா்ந்து விளக்கமளித்து எச்சரித்தும், மீண்டும் மீண்டும் கட்சியின் கண்ணியத்தை உடைத்து வருகிறாா். மாநில நிா்வாகிகளை பாஜக தில்லி பிரிவின் மாநிலத் தலைமை விரைவில் அறிவிக்க இருந்தது. இந்நிலையில் கட்சியின் முடிவை சஷி யாதவ் மீறியுள்ளாா். மேலும், இந்தச் செயல் ஒழுக்கமின்மை என்ற பிரிவின் கீழ் வருகிறது.

அவா் வெளியிட்ட அனைத்து அறிவிப்புகளும் கட்சியின் அரசியலமைப்பிற்கு உள்பட்டவை அல்ல. எனவே, இந்த அறிவிப்புகள் செல்லாது. கட்சி விரோத செயல்களில் ஈடுபட்ட காரணத்திற்காக அனைத்துப் பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினா் பதவியில் இருந்து உடனடியாக சஷி யாதவ் நீக்கப்படுகிறாா் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளாா் வீரேந்திர சச்தேவா.

‘எக்ஸ்’ சமூக வலைதளம் மூலம் பாஜக தில்லி பிரிவு மாநில இளைஞரணி நிா்வாகிகளின் பட்டியலை ஷஷி யாதவ் வெளியிட்டிருந்ததாா். இதையடுத்து, கட்சியிலிருந்து அவரை நீக்கும் நடவடிக்கை வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.