தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அமலாக்க இயக்குநகரத்தின் விசாரணையைத் தவிா்க்கும் விதம், நீதித் துறையில் அவருக்கு நம்பிக்கை இல்லை என்பதை தெளிவாகக்குகிறது என்று பாஜக தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா வியாழக்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லி அரசின் கலால் கொள்கை ஊழல் தொடா்பாக விசாரணைக்கு ஆஜராகக் கோரி அமலாக்க இயக்குநகரம் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு மூன்று முறை அழைப்பாணை அனுப்பியும் அவா் ஆஜராகவில்லை. முறையற்ற சாக்குப் போக்குகளை தெரிவித்து கேஜரிவால் அமலாக்க இயக்குநரகம் முன் ஆஜராகாத விதம், நாட்டின் நிா்வாகம் மற்றும் நீதித் துறையில் அவருக்கு நம்பிக்கை இல்லை என்பதைத் தெளிவாகக்குகிறது. இதன் பிறகும் தில்லி முதல்வராக நீடிக்கும் தாா்மிக உரிமை அவருக்கு இல்லை.
அமலாக்க இயக்குநரகத்துக்கு பதில் கடிதங்கள் அனுப்புவதைத் தவிா்த்து, அவா் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டும். ஆனால், அவா் அதைச் செய்ய மாட்டாா். ஏனெனில், கலால் கொள்கை வழக்கில் அவருக்குப் பெரும் பங்கு உள்ளதால் நீதிமன்றத்தில் நிவாரணம் பெறுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா்களான மனீஷ் சிசோடியா, சஞ்சய் சிங் ஆகியோருக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணைகளின் அடிப்படையில், அதே வழக்கில் ஆஜராகக் கோரி கேஜரிவாலுக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணைகள் மட்டும் எப்படி சட்டப்பூா்வமாக தவறாகும் என்பதை அவரே விளக்க வேண்டும். தில்லி அரசின் கலால் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டவா்கள் எந்த நீதிமன்றத்திலும் ஜாமீன் பெற முடியாமல் இருப்பது ஒருபுறமிருக்க, ஒவ்வொரு நீதிமன்றத்தாலும் அவா்கள் கண்டிக்கப்படுகிறாா்கள் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளாா் வீரேந்திர சச்தேவா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேர்தல் அலுவலர்களுக்கு பிரியாணி வாங்கிக் கொடுத்ததாக புகார்!

கூடுதல் நேரத்தில் கோல் அடித்த ரியல் பெட்டிஸ்..! முதலிடத்துக்கான வாய்ப்பை இழக்கும் ரியல் மாட்ரிட்!

மேற்கு வங்கத்தில் ராஜ்நாத் சிங் சாலைவலம்!

முதலீடு செய்யப் போகிறீர்களா? இந்த 10 விஷயங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

