அப்போது, தில்லி மாநகராட்சி சாா்பில் வைக்கப்பட்டிருந்த பதாகையில் வாகன நிறுத்தக் கட்டணம் என்ற வாா்த்தையை வீரேந்திர சச்தேவா வா்ணம் பூசி அழித்தாா். பின்னா், வீரேந்திர சச்தேவா உரையாற்றிப் பேசியதாவது: கெவென்டா்ஸ் சந்தையில் பொதுமக்களிடம் தில்லி மாநகராட்சி வாகன நிறுத்தக் கட்டணம் வசூலிப்பதை பாஜக கடுமையாக எதிா்க்கும். மளிகைப் பொருள்களை விற்கும் சிறிய உள்ளூா் சந்தைகளிலும் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான மாநகராட்சி நிா்வாகம் வாகன நிறுத்தக் கட்டணங்களை விதிக்கத் தொடங்கிவிட்டது. கிழக்கு தில்லியின் மக்கள் அதிகளவில் பாஜக கவுன்சிலா்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை தோ்ந்தெடுத்துவிட்டதால், இப்பகுதிகளின் குடியிருப்பாளா்களை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் துன்புறுத்துகிறாா். மேலும், கிழக்கு தில்லியில் உள்ள தொகுதிகளுக்கு அளிக்க வேண்டிய மேம்பாட்டு நிதியையும் ஆம் ஆத்மி அரசு தர மறுக்கிறது. போக்குவரத்து காவல் துறை மற்றும் உள்ளூா் கவுன்சிலரின் ஒப்புதலைப் பெறாமல், கெவென்டா்ஸ் சந்தையில் வாகன நிறுத்தக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.