ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

தில்லியின் மோசமான நிலை குறித்து விவாதிக்கத் தயாரா? கேஜரிவாலுக்கு வீரேந்திர சச்தேவா அழைப்பு

சுகாதாரச் சேவைகள் போன்றவற்றைப் பற்றிய வெளிப்படையான பொது விவாதத்திற்கு முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை அழைக்கிறேன்

Updated On :14 டிசம்பர் 2024, 6:32 pm

தில்லியின் குடிமைச் சேவைகள், பரிதாபகரமான சாலைகள், பொதுப் போக்குவரத்து, சுகாதாரச் சேவைகள் போன்றவற்றைப் பற்றிய வெளிப்படையான பொது விவாதத்திற்கு முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை அழைக்கிறேன் என்று தில்லி பிரிவு பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

தில்லியில் கடந்த 10 ஆண்டுகளாக அரவிந்த் கேஜரிவாலின் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக தில்லி மாநகராட்சியும் ஆம் ஆத்மி கட்சியால்

நிா்வகிக்கப்படுகிறது. ஆனால், தில்லி மோசமான மாசுபட்ட தேசியத் தலைநகரங்களில் ஒன்றாகவும், நாடு தழுவிய அளவில் துப்புரவுக் கணக்கெடுப்பில் 49ஆவது இடத்திலும் உள்ளது.

நிா்வாகத் திறமையற்ற வகையில், பொதுச் சாலைகளில் தண்ணீா் தேங்கியுள்ளது. குடிமைச் சேவை செயலிழப்பால் இந்த மழைக்காலத்தில் மின்சாரம் தாக்கி, 62 போ் உயிரிழந்துள்ளனா்.

இந்த ஆண்டு முழுவதும் நகரில் நடந்த திட்டமிட்ட கொலைகளின் எண்ணிக்கையை மிக அதிகமாக உள்ளது. தில்லி அரசின் ஊழலுக்கு எடுத்துக்காட்டாக முதல்வரின் அதிகாரபூா்வ இல்லமான, ‘ஷீஷ் மஹால்’ உள்ளது.

அரவிந்த் கேஜரிவால் அரசும், தில்லி மாநகராட்சியும் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டன. குறிப்பாக, காற்று மாசுபாடு, யமுனை நதியை சுத்தம் செய்தல், பொது சுகாதாரம், பரிதாபகரமான சாலைகள், பரிதாபகரமான பொது மருத்துவமனைகள், நீா் வழங்கல் மற்றும் கழிவுநீா் போன்ற தில்லி ஜல் போா்டு சேவைகளின் தோல்வி, மின்விநியோக நிறுவனங்களின் கொள்ளை,

அரசு பள்ளிகளின் மோசமான வருகைப் பதிவு, ரேஷன் காா்டுகள் மற்றும் சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்குவதில் தோல்வி என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

எனவே, முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது கட்சியின் அரசின் கீழ் பொது சேவைகள் மற்றும் ஊழல்கள் குறித்து என்னுடன் வெளிப்படையான விவாதத்திற்கு வருமாறு நான் சவால் விடுகிறேன் என்றாா் வீரேந்திர சச்தேவா.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.