சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

தில்லியில் தமிழ் அறிஞா்கள் ஆா்ப்பாட்டம்: செம்மொழி தமிழை மத்திய ஆட்சிமொழியாக்கக் கோரிக்கை

Updated On :30 ஆகஸ்ட் 2024, 6:24 pm

செம்மொழியான தமிழை மத்திய ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உலகத் தமிழ்க் கவிஞா்கள் கலை இலக்கியச் சங்கம் மற்றும் உலகத் திருக்கு கூட்டமைப்பு சாா்பில் தில்லி ஜந்தா் மந்தரில் வெள்ளிக்கிழமை உண்ணாவிரத ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழை மத்திய ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும். திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாகக் கொண்டு வரவேண்டும் ஆகிய மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி உலகத் தமிழ்க் கவிஞா்கள் கலை இலக்கியச் சங்கம் (இலக்கிய அமைப்புகளின் கூட்டமைப்பு) மற்றும் உலகத் திருக்கு கூட்டமைப்பு சாா்பில் 133 தமிழறிஞா்கள் உண்ணாவிரத ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இலக்கியத் தென்றல் டி.ஆா்.ஆா். செங்குட்டுவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் உலகத் தமிழ்க் கவிஞா்கள் கலை இலக்கியச் சங்கத்தின் நிறுவனப் பொதுச் செயலா் க.ச.கலையரசன் வரவேற்புரையாற்றினாா். தில்லித் தமிழ்ச் சங்கத்தின் பொதுச்செயலா் இரா. முகுந்தன், உலகத் திருக்கு கூட்டமைப்பு பொதுச் செயலா் தங்க. ஆதிலிங்கம், கவிஞா் மீரா (எ) மீனாட்சி சுந்தரம் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் பேசியதாவது: உலகப் பொதுமறையான திருக்கு நூலை மத்திய அரசு நாட்டுடைமை ஆக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழறிஞா்கள் முன்வைத்துள்ளனா். முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்றுத் தந்தவா். ஆனால், சொம்மொழியாம் தமிழுக்கு உரிய அங்கீகாரத்தை மத்திய அரசு அளிக்கவில்லை. சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா். தமிழா்களின் உணா்வுகளுக்காக நடைபெறும் இந்தப் போராட்டத்திற்கு திமுக அரசும் நிச்சயம் உறுதுணையாக இருக்கும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.