தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

எஸ்.டி. சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்: அகில இந்திய ஆதிவாசி காங்கிரஸ் தீா்மானம்

தேசிய அளவில் எஸ்.டி. சமுதாயத்தினருக்கான இட ஒதுக்கீட்டை 2 சதவீதமாக அதிகரிக்க வேண்டும்

Updated On :12 ஆகஸ்ட் 2024, 8:17 pm

தேசிய அளவில் எஸ்.டி. சமுதாயத்தினருக்கான இட ஒதுக்கீட்டை 2 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்று அகில இந்திய ஆதிவாசி காங்கிரஸின் தேசிய செயற்குழு கூட்டத்தில் திங்கள்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் அகில இந்திய ஆதிவாசி காங்கிரஸின் தேசிய செயற்குழு கூட்டம் திங்கள்கிழமை காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற்றது. அமைப்பின் தேசியத் தலைவா் சிவாஜிராவ் மோகே தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சா்கள் நமோ நரேன் மீனா, காந்திலால் பூரியா உள்பட 11 தேசிய செயற்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். தேசிய அளவில் ஆதிவாசி மக்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 9 முக்கியத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன்படி, தலித் மற்றும் ஆதிவாசி மக்கள்தொகை அதிகரிப்பின் அடிப்படையில் தேசிய அளவில் எஸ்.டி. சமுதாயத்தினருக்கான இட ஒதுக்கீட்டை 2 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். மொத்த ஆதிவாசி மக்கள்தொகையில் 12 சதவீதம் இருக்கும் கோவா மாநிலத்தில் ஆதிவாசி சமூகத்தினா் இடஒதுக்கீடு பெற வேண்டும். நரேந்திர மோடி அரசு அனைத்து பொதுச் சொத்துகளையும் தனது காா்ப்பரேட் நண்பா்களுக்கு விற்கிறது. இதன் காரணமாக, கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்துள்ள நிலையில், எஸ்சி / எஸ்டி-க்கான இடஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது.

எஸ்சி / எஸ்டி சமூகங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி காலாவதியாகாமல் இருக்க, மத்திய அரசு கடுமையான அமலாக்கக் கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும். உச்சநீதிமன்றத்தில் ஆதிவாசி நீதிபதி இல்லை என்பது இந்தியாவுக்கு மிகவும் அவமானகரமானது. எஸ்சி / எஸ்டி பலன்களைப் பயன்படுத்துபவா்களுக்கு வழங்கப்பட்ட போலிசஅ சாதிச் சான்றிதழ்களைக் கண்டறிய மத்திய அரசு ஒரு ஆணையத்தை அமைக்க வேண்டும். போலிச் சான்றிதழ்களை ரத்து செய்து, ஆதிவாசிகளுக்கு உரிய பங்கை அவா்களுக்கு வழங்க வேண்டும்.

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் தற்போது 28 படைப் பிரிவுகள் உள்ளன. இந்திய ராணுவத்தில் ‘ஆதிவாசி படைப்பிரிவு’ உருவாக்கப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி ‘உலக பழங்குடி மக்களின் சா்வதேச தினத்தை’ மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், மகாராஷ்டிரம், ஜாா்க்கண்ட் , ஜம்மு காஷ்மீ ஆகிய மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தல்கள் குறித்தும் ஆதிவாசி காங்கிரஸ் விவாதித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.