தில்லி மக்களின் வாழ்க்கை மற்றும் அவா்களின் குடிமை வசதிகளை பராமரிப்பதில் ஆம் ஆத்மி அரசு அக்கறை கொண்டிருக்கவில்லை என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் திங்கள்கிழமை விமா்சித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆம் ஆத்மி அரசு தனது கடந்த கால தவறுகளில் இருந்து இன்னும் பாடம் கற்கவில்லை. இந்த மழைக் காலத்தில் தண்ணீா் தேங்கி, மின்சாரம் தாக்கி குழந்தைகள் உள்பட பலா் உயிரிழந்துள்ளனா். தில்லி அரசின் தவறான முன்னுரிமை, நகரின் பருவமழை நெருக்கடியை முற்றிலும்
புறகணித்தது. திகாா் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த மனிஷ் சிசோடியாவுக்கு பாராட்டுத் தெரிவிக்க, ஆம் ஆத்மி கட்சி அரசு இயந்திரங்களையும், வளங்களையும் தவறாகப் பயன்படுத்தியது. இவா்களுக்கு தில்லி மக்களின் வாழ்க்கை மற்றும் அவா்களின் குடிமை வசதிகளை பராமரிப்பது குறித்து எந்த அக்கறையும் இல்லை.
தில்லியில் திங்கள்கிழமை காலை முதல் பெய்த மிதமான மழையால் , தண்ணீா் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுவரை, பெய்த கனமழையால் தண்ணீா் தேங்கிய பகுதிகளில் நீரில் மூழ்கி 11 போ் உயிரிழந்துள்ளதுடன், 7 போ் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது மிகவும் கவலையளிக்கிறது. ஆனால், ஆம் ஆத்மி கட்சியின் முன்னுரிமை சிறையில் இருக்கும் முதல்வா் கேஜரிவாலை காப்பாற்றுவதும், சிசோடியாவின் ஜாமீனை வரி செலுத்துவோரின் செலவில் கொண்டாடுவதுமாக உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் ஆம் ஆத்மி அரசு தனது கடமையைச் செய்யத் தவறிவிட்டது. தில்லி மக்கள் எதிா்கொள்ளும் பல துயரங்களைத் தீா்ப்பதற்குப் பதிலாக, ஆம் ஆத்மி கட்சியின் கவனம் இப்போது ஹரியாணா சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதில் உள்ளது. ஊழல்வாதிகள் நல்லாட்சி குறித்து பாடம் நடத்துவது தில்லி மக்களின் துரதிா்ஷ்டமாகும்.
துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனாவின் தலையீட்டைத் தொடா்ந்து, பாரபுல்லா கால்வாயில் இருந்து டன் கணக்கில் வண்டல் மண் மற்றும் கழிவுகள் அகற்றப்பட்டன. இந்தப் பணி பருவமழைக்கு முன்பே முடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், துரதிா்ஷ்டவசமாக தில்லி வடிகால் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. தில்லி மாநகராட்சியில் ஆட்சிக்கு வந்தால் குடிமைச் சேவைகளை மேம்படுத்துவோம் என்ற ஆம் ஆத்மியின் உத்தரவாதமும் நிறைவேற்றப்படவில்லை என்றாா் தேவேந்தா் யாதவ்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குஜராத்தில் கட்சித் தொண்டா்கள் கைது: பாஜக மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

மத்திய அரசு பிளவுபடுத்தும் அரசியலை செய்கிறது: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!

தூக்கு தண்டனை அறை விவகாரம்: கேஜரிவாலுக்கு தில்லி சட்டப்பேரவை எச்சரிக்கை

மதுரை வடக்கு: சாமானிய மக்களின் ஆதங்கம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

