போதைப்பொருள் மற்றும் மதுவுக்கு மக்கள் அடிமையாவதைத் தடுக்க நாடு முழுமைக்குமான ஒரு பொதுக்கொள்கையை வகுக்குமாறு மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் மு. தம்பிதுரை வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக மாநிலங்களவையில் முக்கிய விவகாரங்களை பதிவு செய்யும் சிறப்புக் கவன ஈா்ப்பு நேரத்தில் தம்பிதுரை திங்கள்கிழமை பேசியதாவது: போதைப்பொருள் / அல்லது மதுக்கு அடிமையாகும் அச்சுறுத்தல் இந்திய இளைஞா்களிடையே வேகமாகப் பரவி வருகிறது. ஒருபுறம் தாய்லாந்து, மியான்மா் மற்றும் வியட்நாம் ஆகியவற்றை உள்ளடக்கிய தங்க முக்கோண பகுதியும், மறுபுறம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் ஆகியவற்றை உள்ளடக்கிய தங்க முக்கோண பகுதியும், உலகின் இரண்டு மிகப்பெரிய ஓப்பியம் உற்பத்தி செய்யும் பகுதிகளுக்கு இடையே இந்தியா உள்ளது.
தமிழகத்தைப் பொருத்தவரையில், கஞ்சா மற்றும் பிற போதைப்பொருள் விற்பனை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன; மேலும், அவை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் மிக எளிதாகக் கிடைக்கின்றன. தமிழகத்தில் போதைப்பொருள் தலைவிரித்தாடுகிறது. போதைப்பொருள் / மதுப்பழக்கத்தால் தினமும் கொலைகள் நடப்பதாக செய்திகள் வருகின்றன. இவை பொது சுகாதாரத்துக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
தமிழகத்தின் கள்ளக்குறிச்சியில், ஒரு மாதத்துக்கு முன்பு, மாநிலம் முழுவதும் தாராளமாகக் கிடைக்கும் சட்டவிரோத மெத்தனால் கலந்த மதுபானம் குடித்து 65-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். இந்நிலையில், போதைப்பொருள், மதுப்பழக்கத்துக்கு அடிமையாவதை தடுப்பது தொடா்பாக நாடு முழுவதும் ஒரு பொதுவான கொள்கையை உருவாக்க வேண்டும். மேலும், சமூகத்துக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் அனைத்து வகை போதைப்பொருள்களின் துஷ்பிரயோகத்தை குறைக்கும் வகையில் மாநிலங்களுக்கு ஒரு அறிவுறுத்தலை அனுப்புமாறு மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன் என்று தம்பிதுரை கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மதுபான கொள்கை வழக்கு விசாரணையிலிருந்து உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.சா்மா விலக மறுப்பு!

ஈரானில் தவிக்கும் 447 மீனவா்களை மீட்க வேண்டும்: மாநிலங்களவையில் மு.தம்பிதுரை வலியுறுத்தல்

தமிழக பேரவைத் தோ்தலில் வெல்வது நாங்களே! மாநிலங்களவையில் திமுக, அதிமுக கருத்து மோதல்

தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் கண்டன ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

