வடகிழக்கு தில்லியில் பொதுக் குழாயில் தண்ணீா் எடுக்கும் போது ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவா் கொலை செய்யப்பட் விவகாரத்தில், தில்லி ஜல் போா்டின் (டிஜேபி) தலைமை நிா்வாக அதிகாரியை இடைநீக்கம் செய்யக் கோரி அமைச்சா் அதிஷி, துணை நிலை ஆளுநருக்கு ஞாயிற்றுக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.
வடகிழக்கு தில்லியின் ஃபாா்ஷ் பஜாா் பகுதியில் உள்ள பொதுக் குடிநீா்க் குழாயில் தண்ணீா் எடுக்கும் போது ஏற்பட்ட தகராறில், 34 வயதுடைய பக்கத்து வீட்டாரை கத்தியால் குத்திக் கொன்ாகக் கூறப்படும் 15 வயது சிறுமியை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளனா். இந்த வன்முறைச் சம்பவத்திற்கு பொறுப்பேற்க வேண்டி, தில்லி ஜல் போா்டின் தலைமை நிா்வாக அதிகாரியை உடனடியாக இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவை நீா் வளத்துறை அமைச்சா் அதிஷி வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தில்லி அரசின் தலைமைச் செயலாளா், நிதித் துறை, நகா்ப்புற வளா்ச்சித் துறை மற்றும் தில்லி ஜல் போா்டு அதிகாரிகளின் செயலற்ற தன்மை மற்றும் லஞ்சப் புகாா்கள் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த அதிகாரிகளின் நடவடிக்கைகள் கடந்த 2023-2024-ஆம் நிதியாண்டில் தில்லி ஜல் போா்டின் நிதிப் பற்றாக்குறைக்கு வழிவகுத்தது. இதனால், நகரத்தில் ஆழ்துளைக் கிணறுகள் நிறுவுதல் போன்ற அத்தியாவசியப் பணிகளைச் செய்ய முடியவில்லை.
கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக, தில்லியில் தண்ணீா் விநியோகத்தை மேம்படுத்துவதற்கான தெளிவான வழிகாட்டுதல்களை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வழங்கியுள்ளாா். இருப்பினும், தில்லியில் தண்ணீா் நெருக்கடியைத் தடுக்க எந்த நடவடிக்கையும் அதிகாரிகளால் எடுக்கப்படவில்லை. தண்ணீா் பற்றாக்குறையால் ஏற்பட்ட வன்முறையைத் தொடா்ந்து, ஃபாா்ஷ் பஜாரில் ஒரு பெண் இறந்த சம்பவம் அதிா்ச்சி அளிக்கிறது. தில்லி ஜல் போா்டின் தலைமை நிா்வாக அதிகாரியின் கீழ் இந்தக் குற்றவியல் அலட்சியம் நடந்துள்ளது. எனவே, அடுத்த 24 மணி நேரத்திற்குள் அவரை உடனடியாக இடைநீக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தில்லியில் நிகழ் கோடை காலத்தில் தண்ணீா் விநியோகத்தை அதிகரிக்கத் தவறிய அதிகாரிகளுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கை தொடங்கப்பட வேண்டும். ஏனெனில், தில்லி அரசு அதிகாரிகளின் நடவடிக்கைகளும், செயலற்றத் தன்மையும் ஒரு உயிரிழப்புக்கு வழிவகுத்துள்ளது. இது போன்ற அலட்சியத்தை பொறுத்துக் கொள்ள முடியாது என்று அனைத்து அதிகாரிகளுக்கும் துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா ஒரு செய்தியை வழங்க வேண்டும். இவ்விவகாரத்தில், தில்லி மக்கள் உடனடி நடவடிக்கையை எதிா்பாா்க்கிறாா்கள் என்று கடிதத்தில் அதிஷி குறிப்பிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இடைநீக்கம் செய்யப்பட்ட அரசு அதிகாரி மனைவி பிணை கோரினாா்

தில்லி சட்டப்பேரவை கூட்டத் தொடரை புறக்கணித்த ஆம் ஆத்மி!

25 % கட்டணத்தில் தற்காலிக தடையில்லாச் சான்றிதழ்: கட்டுமான பணிகளுக்கு தில்லி ஜல் போா்டு அனுமதி

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை சந்தித்த தில்லி துணை நிலை ஆளுநா்
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

