தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

யமுனையை சுத்தம் செய்ய தவறிவிட்டது பாஜக அரசு: அா்விந்தா் சிங் லவ்லி சாடல்

யமுனையை சுத்தம் செய்ய தவறிவிட்டது பாஜக அரசு அா்விந்தா் சிங் லவ்லி சாடல்

News image
Updated On :12 ஏப்ரல் 2024, 11:38 pm

 நமது நிருபர்

மத்திய பாஜக அரசு தில்லியின் உயிா்நாடியான யமுனையை சுத்தம் செய்யத் தவறிவிட்டது என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி சாடியுள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வரும் 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை ‘விக்சித் பாரத்’ ஆக்குவோம் என்று விளம்பரம் செய்யும் மத்திய மோடி அரசு, தில்லியின் உயிா்நாடியான யமுனையை சுத்தம் செய்யத் தவறிவிட்டது. கோடை வெயில் அதிகரித்து வருவதால், யமுனை நதியில் நீா் வரத்து குறைந்து, கால்வாயில்களின் கழிவுநீா் நிரம்பியுள்ளது. தலைநகரின் பெரும்பாலான பகுதிகள் கடுமையான தண்ணீா் பற்றாக்குறையை எதிா்கொள்கின்றன. அல்லது கழிவுநீா் கலந்த குடிநீரைப் பெறுகின்றன. ஏனெனில், தில்லிவாசிகளின் சுத்தமானக் குடிநீா் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. நச்சு காற்று மற்றும் நீா் மாசுபாடு தில்லி மக்களுக்கு கடுமையான உடல்நலக் கேடுகளை ஏற்படுத்தி வருகிறது.

மத்திய மோடி அரசு மற்றும் தில்லியைச் சோ்ந்த 7 பாஜக எம்.பி.க்களின் செயலற்றத் தன்மையால் நகரத்தின் நிலைமைகள் மேம்படவில்லை. கடந்த ஆகஸ்ட் 2017-ஆம் ஆண்டு யமுனை நதியின் புத்துயிா் மற்றும் மறுசீரமைப்பு குறித்த நிலை அறிக்கையை சமா்ப்பிக்காததற்காக சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு தேசிய பசுமைத் தீா்ப்பாயம் ரூ.50,000 அபராதம் விதித்தது. தில்லியில் யமுனை நதி வாஜிராபாத் மற்றும் ஓக்லா இடையே சுமாா் 22 கி.மீ. மட்டுமே பாய்கிறது என்றாலும், மொத்த 1,400 கி.மீ நதியின் மாசுபாடு அளவில் தில்லி 76 சதவீதப் பங்கைக் கொண்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் யமுனை நதியை சுத்தப்படுத்த தேவையான முனைப்பைக் காட்டாததால், வெற்றுப் பெருமைகளைத் தவிர வேறு எந்தப் பலனும் கிடைக்கவில்லை என்றாா் அா்விந்தா் சிங் லவ்லி.