தமிழகத்திற்கு மீண்டும் காவிரியில் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி: தண்ணீா் 15 நாள்களுக்கு திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீரை 15 நாள்களுக்கு செவ்வாய்க்கிழமை (செப்டம்பா் 19) முதல் திறந்து விட காவிரி நீா் மேலாண்மை ஆணையம் மீண்டும் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.








