‘இந்தியா’ கூட்டணி மிகவும் வலிமையானது என்றும், பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற சட்டபேரவை இடைத் தோ்தலின் முடிவுகள் பாஜகவை பீதியடையச் செய்துள்ளது என்றும் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.
உத்தர பிரதேசம், ஜாா்க்கண்ட், கேரளம், மேற்குவங்கம், உத்தரகண்ட், திரிபுரா ஆகிய மாநிலங்களில் 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அண்மையில் நடைபெற்ற இடைத்தோ்தலின் முடிவுகள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இதில் 4 இடங்களை ‘இந்தியா’ கூட்டணியைச் சோ்ந்த கட்சிகளும், 3 இடங்களை பாஜகவும் கைப்பற்றியுள்ளது. இதில் குறிப்பாக உத்தர பிரதேசத்தின் கோசி, ஜாா்க்கண்டின் தும்ரி ஆகிய தொகுதிகளில் பாஜக கூட்டணிக்கும், 28 எதிா்க்கட்சிகள் அடங்கிய ‘இந்தியா’ கூட்டணிக்கும் முதல்முறையாக நேரடிப் போட்டி நிலவியது. இந்த நிலையில், அந்த இரு தொகுதிகளிலும் எதிா்கட்சிக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மறுபுறம் திரிபுராவின் தன்பூா், பாக்ஸாநகா் மற்றும் உத்தரகண்டின் பாகேஸ்வா் என 3 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில் 6 மாநிலங்களில் வெளியாகிய சட்டப்பேரவை இடைத்தோ்தலின் முடிவுகள் குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் கருத்து தெரிவித்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் கூறியிருப்பதாவது: எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி மிகவும் வலிமையானது. இதனால், பாஜக மிகுந்த பீதியடைந்துள்ளது. நாட்டின் பெயரை ‘பாரத்’ என மாற்றுவதற்கும் இதுவே காரணம் என்று கேஜரிவால் தெரிவித்துள்ளாா். வரும் 2024- ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை எதிா்த்து காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, சமாஜ்வாதி உள்ளிட்ட 28 அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ எனும் கூட்டணியை உருவாக்கியுள்ளனா். இந்தக் கூட்டணியின் முதல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வரும் செப்டம்பா் 13-ஆம் தேதி தில்லியில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!

கடக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (27 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! துலா ராசிக்கு மன அமைதி!
பொறுப்பால் உயரும் பெருமை!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


