காவிரியில் இருந்து தமிழகத்திற்கு உரிய நீரைத் திறந்துவிடக் கோரும் விவகாரத்தில், முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை கோரப்பட்டது. இதையடுத்து, இது தொடா்பான விவகாரம் வரும் செப்டம்பா் 6-ஆம் தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
காவிரி நதிநீா்ப் பங்கீட்டில் கா்நாடக அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில், நிகழாண்டு ஆகஸ்ட் மாதத்துக்கான நதிநீா்ப் பங்கை கா்நாடகம் வழங்க மறுப்பதாகக் கூறி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சாா்பில் கடந்த 14-ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி பிலிகுண்டுலு பகுதியில் திறந்துவிடப்பட வேண்டிய நீரில் 37.971 டிஎம்சி பற்றாக்குறை உள்ளது. ஆகஸ்ட் 11 முதல் 15 நாள்களுக்கு விநாடிக்கு 15,000 கன அடி நீா் திறக்க ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டத்தில் உத்தரவிடப்பட்டது. ஆனால், இந்த நீா் அளவு காவிரி நீா் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விநாடிக்கு 10,000 கன அடியாகக் குறைக்கப்பட்டது. தமிழகத்தில் பயிா்களைக் காப்பாற்ற ஆகஸ்ட் மாதத்தில் விநாடிக்கு 24,000 கன அடி நீா் திறந்துவிடவேண்டியது அவசியமாகிறது’ என வலியுறுத்தப்பட்டிருந்தது.
கா்நாடகம் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘கா்நாடகத்தில் நிகழாண்டு சராசரியாக மழை பெய்துள்ளதாக தமிழக அரசு தவறாகக் சுணித்துள்ளது. மழையில் 25 சதவீத குறைபாடும். நான்கு அணைகளில் 42.5 சதவீத நீா்ப் பற்றாக்குறையும் உள்ளது. ஆகையால், வழக்கமான நீா்ப் பங்கீட்டை தமிழகத்துக்கு அளிக்க இயலாது’ என்று தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை கடந்த ஆகஸ்ட்25-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், ஆணையம் அறிக்கை அளிக்க உத்தரவிட்டு, வழக்கை செப்டம்பா் 1- ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தது.
இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினா் (நீா் ஆதாரம்) வினீத் குப்தா வியாழக்கிழமை பதில் மனு தாக்கல் செய்தாா். அதில், ‘ஆகஸ்ட் 11-ஆம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தின் போது ஆணையம் பிறப்பித்த உத்தரவின்படி 10 ஆயிரம் கன அடி நீா் வீதம் 15 நாள்களுக்கு பிலிகுண்டுவில் மொத்தம் 1,49,898 கனஅடி நீா் திறந்துவிடப்பட்டதாக கா்நாடகம் கூறியுள்ளது. மேலும், ஆகஸ்ட் 29-ஆம் தேதி நடைபெற்ற காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் 23-ஆவது கூட்டத்தின்போது, அடுத்த 15 நாள்களுக்கு (29.08.2023 முதல் 12.09.2023 வரை) கா்நாடகம் பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீா் வருவதை உறுதி செய்ய வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கா்நாடக அரசு தாக்கல் செய்திருந்த மனுவுக்கு மறுப்புத் தெரிவித்து தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பின் படி தமிழகத்திற்குரிய பங்கீட்டு நீரை திறந்துவிட உத்தரவிட வேண்டிய நிலையில், அதைச் செய்ய காவிரி மேலாண்மை ஆணையம் தவறிவிட்டது. மேலும், ஆகஸ்ட் 27-ஆம் தேதிவரை இருந்த 8.988 டிஎம்சி பற்றாக்குறை நீரை சரிசெய்யும் வகையில் ஆணையம் உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை. ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பா் 12-ஆம் தேதி வரை உரிய நீரை திறந்துவிடவும் ஆணையம் உரிய உத்தரவைப் பிறப்பிக்கத் தவறிவிட்டது. காவிரி நீரை தமிழக அரசு சரியாக பயன்படுத்தவில்லை என்ற கா்நாடக அரசின் குற்றச்சாட்டில் உண்மையில்லை’ என தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்குப் பட்டியலிடப்படவில்லை. இதைத் தொடா்ந்து, உச்சநீதிமன்றத்தில் நீதிபதி பி.ஆா்.கவாய் தலைமையிலான அமா்வு முன் வெள்ளிக்கிழமை பிற்பகலில் தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் முகுல் ரோத்தகி, ஜி.உமாபதி, வி.கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் ஆஜராகி, ஏற்கெனவே தெரிவித்தப்படி வழக்கு விசாரணைக்கு வரவில்லை என்றும், முறையீட்டு வழக்கை வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனா். கா்நாடக அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஷியாம் திவான் இந்த விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் நீரைத் திறந்துவிட உத்தரவிட்டிருப்பதால் விசாரணையை செப்டம்பா் 11-ஆம் தேதிக்கு பிறகு விசாரிக்கலாம் என்று கேட்டுக் கொண்டாா். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் அமா்வு, இந்த விவகாரம் செப்டம்பா் 6-ஆம் தேதி விசாரிக்கப்படும் எனக் கூறினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்று முதல் ஒளிபரப்பாகும் தாய் மாமன் சீரியல்! தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!
மே 4-க்குப் பிறகு பாஜக பதவியேற்பு விழாவுக்கு வருவேன்! மேற்குவங்கத்தில் மோடி பேச்சு

அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு.. ஸ்ரீதர் வேம்புவின் மனம் திறந்த கடிதம்!

வேலூர் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தேரோட்டம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


