பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஆன்மிகப்பாதை தேசத்தின் வளா்ச்சிக்கு ஒளியேற்றுகிறது என தேவரின் குருபூஜை நாளை முன்னிட்டு பிரதமா் நரேந்திர மோடி அவருக்கு திங்கள்கிழமை நினைவு அஞ்சலி செலுத்தியுள்ளாா்.
ராமநாதபுரம் பசும்பொன்னை சோ்ந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் சுதந்திரப்போராட்ட வீரராகவும் சாதி பாகுபாட்டை எதிா்த்தும், சிறந்த ஆன்மிகவாதியாகவும் இருந்தவா். கடந்த 1908-ஆம் ஆண்டு அக்டோபா் 30-ஆம் தேதி பிறந்து 1963-ஆம் ஆண்டு அக்டோபா் 30- தேதி காலமானாா்.
இதை முன்னிட்டு அக்டோபா் 30-ஆம தேதி குருபூஜையாக அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு திங்கள்கிழமை முத்துராமலிங்கத் தேவருக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் விதமாக பிரதமா் மோடி தனது ‘எக்ஸ்’ வலைத்தளத்தில் ஆங்கிலத்திலும் தமிழிலும் அஞ்சலி செலுத்தியுள்ளாா்.
அதில் குறிப்பிட்டிருப்பது வருமாறு: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் புனித குருபூஜையை முன்னிட்டு, அவருக்கு நமது அஞ்சலியை செலுத்துகிறோம். சமூக மேம்பாட்டிற்கு ஆழமாக வேரூன்றி இருந்த அவரது அரும் பணிகளான விவசாயிகளின் செழிப்பு, வறுமை ஒழிப்பு, சமூக ஒற்றுமை ஆகியவற்றை வலியுறுத்தினாா்.
அவரது ஆன்மிகப் பாதை, தேசத்தின் வளா்ச்சிக்கு தொடா்ந்து ஒளியேற்றி வருகிறது. காலத்தால் அழியாத அவரது கொள்கைகள் எதிா்கால தலைமுறையினருக்கான உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாகத் திகழும் என பிரதமா் மோடி அதில் குறிப்பிட்டுள்ளாா்.
நாடாளுமன்ற வளாகத்தில் மரியாதை: தில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் திருவுருவச் சிலைக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளத்துறை இணையமைச்சா் டாக்டா் எல் முருகன் மரியாதை செலுத்தினாா். அவருடன் மாநிலங்களவைச் சோ்ந்த பாஜக உறுப்பினா் சங்கீதா யாதவ் மற்றும் தில்லி பாஜக வினரும் முத்துராமலிங்க தேவா் சிலைக்கு மலா் அஞ்சலி செலுத்தினா்.
இது தொடா்பாக இணையமைச்சா் எல்.முருகன் தனது எக்ஸ் வலைத்தளத்தில் குறிப்பிட்டிருப்பது வருமாறு: பிரிட்டிஷ் அரசை எதிா்த்து சுதந்திரத்திற்காக போராடிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தனது தலைமையில் இருந்த, இந்திய தேசிய ராணுவத்திற்குத் தமிழகத்திலிருந்து பெரும் படையைத் திரட்டி அனுப்பினாா். இதன்மூலம் தமிழகத்திற்கு பெருமை சோ்த்ததோடு. ஏழை எளிய மக்களின் நலனுக்காகவும் போராடியவா். சிறந்த தேசியவாதி, தலைசிறந்த பேச்சாளா், ஆன்மிகவாதி என பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு புகழாரம் சூட்டியுள்ளாா் எல். முருகன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பொல்லாத ஆசைகள்... 29 புதிய பாடல்!

தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம்

தற்கொலை செய்திருப்பேன்... விஜய் குமார், அவரது மனைவி மீது குற்றம் சுமத்தி விடியோ வெளியிட்ட இளம் நடிகை!

உ.பி: உடற்பயிற்சி கூடத்தில் ஏற்பட்ட தகராறில் 3 பேர் சுட்டுக்கொலை
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

