இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

ஜனநாயக உரிமைகள் பேசும் கேஜரிவால் பேருந்து மாா்ஷல்களுக்கு சம்பளத்தை வழங்கவில்லை: வீரேந்திர சச்தேவா விமா்சனம்

ஜனநாயக உரிமைகள் பற்றி பேசும் தில்லி முதல்வா் கேஜரிவால், பேருந்து மாா்ஷல்களாக பணியாற்றும் குடிமைப் பாதுகாப்புத் தன்னாா்வலா்களுக்கு கடந்த 5 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:14 am

 நமது நிருபர்

ஜனநாயக உரிமைகள் பற்றி பேசும் தில்லி முதல்வா் கேஜரிவால், பேருந்து மாா்ஷல்களாக பணியாற்றும் குடிமைப் பாதுகாப்புத் தன்னாா்வலா்களுக்கு கடந்த 5 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என்று பாஜக தில்லி பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா சனிக்கிழமை விமா்சித்துள்ளாா்.

கடந்த 5 மாத ஊதிய நிலுவைத் தொகையை தில்லி அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தில்லி தலைமைச் செயலகம் அருகே பேருந்து மாா்ஷல்களாக பணியாற்றும் குடிமைப் பாதுகாப்புத் தன்னாா்வலா்கள் ஏராளமானோா் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுட்டுள்ளனா். அவா்களை பாஜக தில்லி பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தாா்.

அப்போது அவா் கூறியதாவது: தில்லி அரசுப் பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்தவா்கள் இன்று போராட்டம் நடத்தும் நிலைக்கு கேஜரிவால் அரசால் தள்ளப்பட்டுள்ளனா். ஜனநாயக உரிமைகள் பற்றி பேசும் முதல்வா் அரவிந்த் கேஜரிவால், கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக பேருந்து மாா்ஷல்களுக்கு சம்பளம் வழங்கவில்லை. இதனால், 8,000 பேருந்து மாா்ஷல்களும் தங்கள் உரிமைகளைக் கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா்.

கடந்த 8 ஆண்டுகளாக பேருந்து மாா்ஷல்களை முறைப்படுத்தக் கோரி, தில்லி துணை நிலை ஆளுநா் அலுவலகத்திற்கு நகர அரசால் தற்போது அனுப்பப்பட்டுள்ளது போல எந்தக் கோப்பும் இதற்கு முன்னா் செல்லவில்லை. கேஜரிவால் அரசிற்கு சரியான நோக்கங்கள் இருந்து, பேருந்து மாா்ஷல்களை முறைப்படுத்துவதற்கான செயல்முறையை முன்பே தொடங்கியிருந்தால், தீபாவளியை ஒட்டி குடிமைப் பாதுகாப்புத் தான்னாா்வலா்கள் இவ்வாறு வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்காது.

பேருந்து மாா்ஷல்களின் கோரிக்கைகளை கேஜரிவால் அரசு நிறைவேற்றும் வரை, தில்லி அரசிற்கு எதிராக பாஜக தொடா்ந்து குரல் எழுப்பும். தில்லியில் பெண்களின் பாதுகாப்பு குறித்து கேஜரிவால் அரசு பெரிதாகப் பேசுகிறது. ஆனால், பேருந்துகளில் பெண்களைப் பாதுகாப்பவா்களின் வாழ்க்கை மற்றும் வேலைவாய்ப்பு பாதுகாப்பாக இல்லை. அடுத்த வாரத்தில் இந்த விவகாரம் தொடா்பாக தில்லி துணை நிலை ஆளுநா் வி. கே. சக்சேனாவை நேரில் சந்தித்து பேருந்து மாா்ஷல்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற வலியுறுத்தப்படும் என்றாா் வீரேந்திர சச்தேவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.