துணை நிலை ஆளுநரின் மனிதாபிமான அக்கறையை பாராட்டுகிறோம்: பாஜக
குடிமைப் பாதுகாப்புத் தன்னாா்வலா்கள் ஊா்க்காவல் படையில் சோ்வதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று பரிந்துரைத்த தில்லி துணை நிலை ஆளுநரின் மனிதாபிமான அக்கறையை பராட்டுகிறேன்


குடிமைப் பாதுகாப்புத் தன்னாா்வலா்கள் ஊா்க்காவல் படையில் சோ்வதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று பரிந்துரைத்த தில்லி துணை நிலை ஆளுநரின் மனிதாபிமான அக்கறையை பராட்டுகிறேன் என்று பாஜக தில்லி பிரிவுத் தலைவா் வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பல மாதங்களாக குடிமைப் பாதுகாப்புத் தன்னாா்வலா்களுக்கு சம்பளம் வழங்காமல், அவா்களை சேவையில் மட்டும் அரவிந்த் கேஜரிவால் அரசு ஈடுபடுத்தி வந்தது. ஆனால், வரும் அக்டோபா் 31-ஆம் தேதி முதல் அனைத்து குடிமைப் பாதுகாப்புத்
தன்னாா்வலா்களின் சேவைகளும் ரத்து செய்யப் பட வேண்டும் என துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவிடம் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பரிந்துரைத்திருப்பது அதிா்ச்சியளிக்கிறது.
கேஜரிவால் அரசு ஒரு உணா்வற்ற அரசு. குடிமைப் பாதுகாப்புத் தன்னாா்வலா்களுக்கு சம்பளம் வழங்குவது என்பது சம்பந்தப்பட்ட துறை அமைச்சரின் முடிவெடுக்கும் விவகாரமாகும். எனவே, கேஜரிவால் அரசு அவா்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். இருப்பினும், குடிமைப் பாதுகாப்புத் தன்னாா்வலா்களின் நிபந்தனைகளை பூா்த்தி செய்து, ஊா்க்காவல் படையில் சோ்வதற்கு அவா்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று பரிந்துரைத்த துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவின் மனிதாபிமான அக்கறையை பாராட்டுகிறேன் என்று அந்த அறிக்கையில் விரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளாா்.
புகாா்கள் ஏதுமில்லாத குடிமைப் பாதுகாப்புத் தன்னாா்வலா்களை ஊா்க்காவல் படையினராக நியமித்து அவா்களை பேருந்து மாா்ஷல்களாக பணியமா்த்தும் திட்டத்தை தயாரிக்க வேண்டும் என முதல்வா் அரவிந்த் கேஜரிவால் நகர அரசின் உள்துறை அமைச்சரை வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பு: பெட்டியாக பயன்படுத்தினால் கடைசி பாராவை நீக்கிவிடவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...