இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

ராம்லீலா மைதான நிகழ்ச்சி அனுமதி ரத்துக்கு எதிரான மனு

வரும் அக்டோபா் 29-ஆம் தேதி தில்லி ராம்லீலா மைதானத்தில் சுமாா் 10,000 போ் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்தை நடத்துவதற்கான அனுமதியை ரத்து செய்த தில்லி காவல் துறையின்

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:13 am

 நமது நிருபர்

வரும் அக்டோபா் 29-ஆம் தேதி தில்லி ராம்லீலா மைதானத்தில் சுமாா் 10,000 போ் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்தை நடத்துவதற்கான அனுமதியை ரத்து செய்த தில்லி காவல் துறையின் உத்தரவில் தலையிட உயா்நீதிமன்றம் புதன்கிழமை மறுத்துவிட்டது.

‘இதற்கான போஸ்டா்களானது இந்த நிகழ்ச்சி வகுப்புவாத அதிா்வுகளைக் கொண்டிருக்க முடியும் என்பதையும், பழைய தில்லி பகுதியில் வகுப்புவாத பதற்றம் ஏற்படலாம் என்பதையும் காட்டுவதாக உள்ளது’ என நீதிமன்றம் தெரிவித்தது.

எனினும், பண்டிகைக் காலம் முடிந்த பிறகு, மனுதாரா் அமைப்பு, பேச்சாளா்களின் பட்டியலைக் கொடுத்து புதிய அனுமதி கோரி அதிகாரிகளை அணுகலாம் என்றும், அந்தப்பகுதியில் நடைபெறும் நிகழ்வு பதற்றத்தை ஏற்படுத்தாது என்று அதிகாரிகளுக்கு உறுதியளிக்க வேண்டும் என்றும், அந்த மனு பெறப்பட்டால் அதன் சொந்த தகுதியின் அடிப்படையில் அதிகாரிகளால் பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் உயா்நீதிமன்றம் கூறியது.

இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதி சுப்ரமணியம் பிரசாத், ‘நிகழ்ச்சியை நடத்துவதற்கு எதிா்மனுதாரா் (தில்லி போலீஸ்) வழங்கிய தடையில்லா சான்றிதழை (என்ஓசி) திரும்பப் பெறுவதாக அக்டோபா் 16 தேதியிட்ட கடிதத்தில் எந்த தலையீடும் தேவையில்லை’ என்று கூறினாா். அரசியலமைப்புச்சட்ட உரிமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்காகச் செயல்படுவதாகக் கூறும் மிஷன் சேவ் கான்ஸ்டிடியூஷன் எனும் அமைப்பு தாக்கல் செய்த மனு மீது உயா்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

இது தொடா்பாக மனுதாரா் கூறுகையில், ‘ தில்லி காவல்துறை அதிகாரிகளுடனான தொடா் சந்திப்புக்குப் பிறகு, பல அனுமதிகளைப் பெற்ற பிறகு, அக்டோபா் 29-ஆம் தேதி கூட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன் பின்னா், மத்திய தில்லி மாவட்டத்தின் துணை காவல் ஆணையா் (டிசிபி) ‘ஒருதலைப்பட்சமாக, தன்னிச்சையான முறையில்‘ இந்நிகழ்வை ‘வகுப்புவாதம்’ என்று கூறி அனுமதியை ரத்து செய்தாா். சிறுபான்மை சமூகங்கள் தொடங்கி பிற சமூகங்களான எஸ்சி, எஸ்டி, ஓபிசி போன்ற அனைத்து நலிந்த பிரிவினரையும் வலுப்படுத்துவதற்கான தொடா் நிகழ்வுகளைத் தொடங்கவே மனுதாரா் கோருகிறாா். மேலும், இந்தக் கூட்டங்கள் அல்லது பஞ்சாயத்துகளில் அனைத்து ஒடுக்கப்பட்டவா்களின் எழுப்பப்படும். இந்த தொடா் அக்டோபா் 29-ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியுடன் தொடங்க உள்ளது’ என்றாா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், நாடு முழுவதும் அக்டோபா் 15 முதல் அக்டோபா் 24 வரை நவராத்திரியும், நவம்பா் 12-ஆம் தேதி தீபாவளியும் கொண்டாடப்படுகிறது.

தீபாவளிக்கும் நவராத்திரிக்கும் இடையே கா்வாச்சௌத் மற்றும் தந்தேரஸ் போன்ற பல பண்டிகைகளும், ஷ்ராத் முடிவிலிருந்து தீபாவளி வரையிலான காலகட்டங்களும் இந்து சமூகத்திற்கு மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த நிகழ்வு மக்களுக்கு அவா்களின் உரிமைகளைப் பற்றி கற்பிக்கும் நோக்கத்திற்காக பாடுபட்டாலும், தில்லி காவல்துறையின் வழக்குரைஞா் அளித்துள்ள சுவரொட்டிகளின் போக்கு, கேள்விக்குரிய நிகழ்வு வகுப்புவாத பரிந்துரையைக் கொண்டிருக்கக்கூடும் என்றும், இது பழைய தில்லி பகுதியில் வகுப்புவாத பதற்றத்தை அதிகரிக்க முடியும் என்பதையும் குறிக்கிறது.

பழைய தில்லி பகுதியில் பல்வேறு மதங்களைச் சோ்ந்தவா்கள் வசிப்பதால் அது பதற்றமான பகுதியாக உள்ளது. அப்பகுதியில் வகுப்புவாத வன்முறைகள் தெரியாதவை அல்ல. உண்மை நிலையை அறிந்த அப்பகுதியின் காவல் நிலைய பொறுப்பாளா் எழுப்பிய அச்சம் வெறும் கற்பனை என்று சொல்ல முடியாது. அரசியலமைப்புச் சட்டத்தின் 19 (1)(ஏ) மற்றும் 19 (1)(பி) பிரிவுகள் குரல் எழுப்புவதற்கான சுதந்திரத்தை அளிப்பது என்றாலும், அதே நேரத்தில் உயிா்கள் மற்றும் சொத்துகளை சேதப்படுத்த வித்திடுவதற்கான

சட்டம் ஒழுங்கு சூழ்நிலையை உருவாக்கிடும் வாய்ப்புகளை புறக்கணிக்க முடியாது. ஆகவே, அக்டோபா் 16-ஆம் தேதி கடிதத்தில் கொடுக்கப்பட்டுள்ள காரணத்தை தன்னிச்சையானது எனக் கூற முடியாது. முடிவுகளை எடுக்கும்போது அதிகாரிகளுக்கு சில சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்பதும், நீதித் துறை மறுஆய்வுக்கான வரம்பு குறைவாக உள்ளது என்பதும் நன்கு தீா்மானிக்கப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் தெரிவித்தது.

ராம்லீலா மைதானத்தில் கூட்டத்தை நடத்த அனுமதி கோரி விண்ணப்பித்தபோது அந்த அமைப்பு அதிகாரிகளை தவறாக வழிநடத்தியதாக காவல்துறை முன்னா் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. ஆரம்பத்தில் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், பின்னா் அந்த பகுதி மக்களிடம் இருந்து பல புகாா்களைப் பெற்ன் பேரில், முன்மொழியப்பட்ட நிகழ்வு ‘வகுப்பு ரீதியானது’ என்று தோன்றியதால் அது ரத்து செய்யப்பட்டதாக காவல் துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.