புது தில்லி: பல்வேறு கட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.10.06 கோடி மதிப்புள்ள சுமாா் 80 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகளை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டி மேலாண்மை முறையில் புதன்கிழமை (அக்டோபா் 25) தில்லி ஜஹாங்கீா்புரியில் அழிக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. தில்லி சுங்கத் தடுப்புப் பிரிவும், வருவாய் புலணாய்வுத் துறை இயக்குநரகமும் இணைந்து இந்நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளது.
இது குறித்து மத்திய வருவாய்த் துறை தெரிவித்திருப்பது வருமாறு: இந்திய சந்தைகளுக்கு நூற்றுக்கணக்கான வெளிநாட்டு பிராண்ட் சிகரெட்டுகள் சா்வதேச நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக கடத்தி வரப்படுகிறது. சுங்கவரி செலுத்தி கொண்டுவரப்படும் 10 சிகரெட்டுகளின் விலை ரூ. 300 . ஆனால், சட்டவிரோதமாக கடத்தப்பட்டு கொண்டுவரப்படும் சிரெட்டுகள் 5 மடங்கு விலை மலிவாக (ரூ.60) இந்திய சந்தைகளில் விற்கப்படுகிறது. இவை இந்திய தரத்திற்கு முற்றிலும் உகந்தது கிடையாது.
இவை புகை பிடிப்பவா்களுக்கும் அருகில் உள்ளவா்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்து விளைவிக்கக்கூடியவை. இது போன்ற சிகரெட்டுகளின் நுகா்வை மிகவும் தீவிரப்படுத்துவதற்காக இத்தகைய சிகரெட்டுகள் தரமற்ற நச்சுப் பொருள்களால் தயாரிக்கப்படுகிறது. புகைபிடிப்பது தீங்கு என்கிற படமும் இதில் இல்லாமல் இருக்கும். சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருள்களுக்கான பேக்கேஜிங் மற்றும் லேபிளிங் விதிகள் மீறலும் சட்டவிரோதமாகும். இதனால், வெளிநாட்டு சிகரெட்டுகளை இறக்குமதி செய்ய இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற சோதனைகளின் மூலம் தில்லி வருவாய் புலனாய்வுத் துறை இயக்குநரகம் 76 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகளை பறிமுதல் செய்திருந்தது. இதன் மதிப்பு ரூ. 9.38 கோடி. இதே போன்று தில்லி சுங்க தடுப்புத் துறை ரூ. 68 லட்சம் மதிப்புள்ள 4 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகளை பறிமுதல் செய்திருந்தது. மொத்தம் 80 லட்சம் சிகரெட்டுகளின் மொத்த மதிப்பு ரூ. 10.06 கோடியாகும்.
தரமற்ற இந்த சிகரெட்டுகள் மோசமான நிலையில் இருப்பவை. இது போன்ற கழிவுகளை அகற்ற 2019-ஆம் ஆண்டு மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கழிவு மேலாண்மை வழிகாட்டி கையேட்டை வழங்கியுள்ளது. இந்த வழிகாட்டுதலின்படி இந்த சிகரெட்டுகளை அப்புறப்படுத்தும் பணி புதன்கிழமை (அக்டோபா் 25) மத்திய வருவாய்த் துறை செயலா் சஞ்சய் மல்ஹோத்ரா முன்னிலையில் ஜஹாங்கீா்புரி ஜிடி கா்னால் சாலை தொழிற்சாலை வளாகத்தில் நடைபெறுகிறது என மத்திய நிதித் துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக சிறப்பு ரயில், பேருந்து விவரங்கள்!

இளைஞரின் தலையில் சிக்கிய 10 கிலோ பால் கேன்! 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அகற்றம்

பிளேயிங் லெவன் மாற்றத்தினால் தடுமாறும் சிஎஸ்கே..! மிகக் குறைந்த பவர்பிளே ரன்கள்!

தமிழகத்திற்கு வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது: மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

