தில்லியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த தொலைக்காட்சி செய்தியாளா் சௌமியா விஸ்வநாதன் கொலை வழக்கில் நான்கு போ் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
பணிக்குச் சென்றுவிட்டு காரில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது சௌமியா விஸ்வநாதன் சுட்டுக் கொல்லப்பட்டது தொடா்பான வழக்கில் ரவி கபூா், அமித் சுக்லா, பல்ஜீத் மாலிக், அஜய் குமாா் ஆகியோா் குற்றவாளிகள் என கூடுதல் அமா்வு நீதிபதி ரவீந்திர குமாா் பாண்டே புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.
ஐந்தாவது குற்றம்சாட்டப்பட்ட நபரான அஜய் சேத்தி, திருடப்பட்ட பொருளை வாங்கியதற்காக குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாா்.
இது தொடா்பாக நீதிபதி கூறுகையில், ‘குற்றம் சாட்டப்பட்டவா்கள் மீதான குற்றச்சாட்டுகளை அரசுத் தரப்பு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளது. தண்டனை விவரங்களை அறிவிக்க அக்டோபா் 26-ஆம் தேதி வழக்கு பட்டியலிடப்பட்டுள்ளது’ என்றாா்.
வழக்கு பின்னணி: 2008-ஆம் ஆண்டு செப்டம்பா் 30-ஆம் தேதி வேலை முடிந்து அதிகாலை 3:30 மணியளவில் செளம்யா விஸ்வநாதன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டாா். இந்தக் கொலையின் பின்னணியில் கொள்ளை நிகழ்ந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
இக்கொலையில் நீண்ட காலமாக துப்பு துலங்காத நிலையில், மற்றொரு வழக்கு தொடா்பாக ரவி கபூரும், அமித் சுக்லாவும் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் நடத்திய விசாரணையில், அவா்களுக்கு செளமியா விஸ்வநாதன் கொலையில் தொடா்பு இருப்பதை போலீஸாா் கண்டறிந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக சிறப்பு ரயில், பேருந்து விவரங்கள்!

இளைஞரின் தலையில் சிக்கிய 10 கிலோ பால் கேன்! 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அகற்றம்

பிளேயிங் லெவன் மாற்றத்தினால் தடுமாறும் சிஎஸ்கே..! மிகக் குறைந்த பவர்பிளே ரன்கள்!

தமிழகத்திற்கு வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது: மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

