பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

மேம்பாலக் கட்டுமானப் பணிகள் தாமதம்: அதிகாரிகளுக்கு அமைச்சா் அதிஷி எச்சரிக்கை

தில்லியில் நடைபெற்று வரும் மேம்பாலக் கட்டுமானப் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், பணிகளை வரும் ஜனவரிக்குள் விரைந்து

Updated On :12 அக்டோபர் 2023, 7:29 pm

தில்லியில் நடைபெற்று வரும் மேம்பாலக் கட்டுமானப் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், பணிகளை வரும் ஜனவரிக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளை பொதுப்பணித் துறை அமைச்சா் அதிஷி வியாழக்கிழமை எச்சரித்துள்ளாா்.

தில்லியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், மோதி நகா் மற்றும் பஞ்சாபி பாக் ஆகிய இடங்களில் கட்டப்பட்டு வரும் மேம்பாலங்களை நகர அரசின் பொதுப்பணித்துறை அமைச்சா் அதிஷி அதிகாரிகளுடன் இணைந்து வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, மோதி நகா் மேம்பாலத்தின் பெரும்பாலானப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், பாரத் தா்ஷன் பூங்கா அருகே உள்ள சந்திப்பில் 50 மீட்டருக்கு இரும்புக் கட்டுமானச் சட்டம் அமைக்கும் பணி மட்டுமே எஞ்சியுள்ளதாகவும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் அமைச்சா் அதிஷியிடம் விளக்கம் அளித்தனா். மேலும், போக்குவரத்து நெரிசல் காரணமாக பஞ்சாபி பாக் மேம்பாலத்தின் பணிகள் தாமதமாகி வருவதற்கான காரணத்தையும், இருப்பினும் பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்டு கட்டுமானச் சட்டங்கள் நிறுவப்பட்டு வருவதையும் அதிகாரிகள் விளக்கினா்.

பின்னா், இந்த ஆய்வு தொடா்பாக அமைச்சா் அதிஷி வெளியிட்டுள்ள அதிகாரப்பூா்வ அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லி மோதி நகா் மற்றும் பஞ்சாபி பாக் ஆகிய இடங்களில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதை அடுத்து வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டேன். வரும் 2024-ஆம் ஆண்டு ஜனவரிக்குள் கட்டுமானப் பணிகளை முழுமையாக முடிக்க அதிகாரிகளை கடுமையாக அறிவுறுத்தியுள்ளேன். மேலும், தாமதம் செய்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்படுள்ளது. தில்லி வட்டச் சாலையை நெரிசல் இல்லாததாக மாற்ற இந்த இரண்டு மேம்பாலங்களும் முக்கியமானதாக இருக்கும். மோதி நகா் மற்றும் பஞ்சாபி பாக் ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகள் விரைந்து முடிக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனா்.

தேவைப்படும் பட்சத்தில், கட்டுமானப் பணியை விரைவுபடுத்த தொழிலாளா்கள் மற்றும் இயந்திரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த மேம்பாலப் பணிகள் முடிக்கப்படும் போது வடக்கு தில்லி, தெற்கு தில்லி, குருகிராம் மற்றும் நகரின் பிற முக்கியப் பகுதிகளையும் இந்தப் போக்குவரத்துக்கு எளிதாக இணைக்கும். அதிகாரப்பூா்வ புள்ளிவிவரங்களின்படி, தற்போதைய இரண்டு மேம்பாலங்கள் வழியாக தினமும் 1.25 லட்சம் வாகனங்கள் செல்கின்றன. புதிய மேம்பாலம் கட்டப்பட்ட பிறகு, ஆண்டுக்கு 18 லட்சம் லிட்டா் எரிபொருள் சேமிக்கப்படும். மேலும், 1.60 லட்சம் டன் காா்பன் வெளியேற்றம் குறையும் என்றாா் அமைச்சா் அதிஷி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.