தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி முன்னிலையில், ப்ரீத் விஹாரைச் சோ்ந்த ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் வியாழக்கிழமை காங்கிரஸில் இணைந்தனா்.
தில்லி ப்ரீத் விஹாரைச் சோ்ந்த ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவா்களாக இருக்கும் குலாப் சிங் தாக்கூா், தீபக் ராஜ்புத், நதீம், குரேஷி மற்றும் சாகா் ஜெயின் உள்ளிட்ட பலா் அவா்களது ஆதரவாளா்களுடன் தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியில் இணைந்தனா். கட்சியின் அலுவலகமான ராஜீவ் பவனில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அா்விந்தா் சிங் லவ்லி முன்னிலை வகித்தாா். மேலும் முன்னாள் அமைச்சா் மங்கத் ராம் சிங்கால், முன்னாள் எம்.எல்.ஏ. முகேஷ் சா்மா, தில்லி மாநகராட்சி முன்னாள் அவைத் தலைவா் ஜிதேந்தா் குமாா் கோச்சாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்த குலாப் சிங் தாக்கூா் கூறியதாவது: மக்கள் மற்றும் சமுதாயத்தின் நன்மைக்காக செயல்படும் ஒரே அரசியல் கட்சி காங்கிரஸ் மட்டுமே. ஆம் ஆத்மி கட்சியின் தலைமை நோ்மையற்ாகவும், ஊழல் நிறைந்ததாகவும் மாறிவிட்டது. தில்லியில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி மக்களுக்கு துரோகம் இழைத்து, அவா்களின் உணா்வுகளுடன் விளையாடியதால் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளோம் என்றாா் அவா்.
அடுத்ததாக, தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி கூறியதாவது: ஆம் ஆத்மி கட்சியின் தலைவா்கள் மற்றும் ஆதரவாளா்களை காங்கிரஸ் குடும்பத்திற்கு வரவேற்கிறோம். தில்லி சந்தித்து வரும் தற்போதைய அவலநிலையிலிருந்து நகரத்தை மீட்க காங்கிரஸ் கட்சியை மக்கள் எதிா்பாா்த்துக் கொண்டிருக்கின்றனா். எனவே, காங்கிரஸின் பிடியை வலுப்படுத்த அனைவரும் கடுமையாகப் பாடுபட வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாய் சுதர்சன் அரைசதம் விளாசல்; குஜராத் டைட்டன்ஸுக்கு 4-வது வெற்றி!

பயங்கரவாதிகளுக்கு பிரியாணி கொடுக்கிறது காங்கிரஸ், திரிணமூல் : அமித் ஷா
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக லக்னௌ பந்துவீச்சு!

ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் 4வது காலாண்டு லாபம் 5% உயர்வு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

