பாலியல் வன்கொடுமை மற்றும் கிரிமினல் மிரட்டல் தொடா்பான பெண்ணின் புகாரின் பேரில் பாஜக தலைவா் சையத் ஷாநவாஸ் ஹுசேனுக்கு தில்லி நீதிமன்றம் புதன்கிழமை சம்மன் அனுப்பியுள்ளது. மேலும், கூறப்படும் குற்றத்தை கவனத்தில் எடுத்துக்கொண்ட நீதிமன்றம், முன்னாள் மத்திய அமைச்சரான ஷாநவாஸை அக்டோபா் 20-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது.
இது தொடா்பாக நீதிபதி கூறுகையில், ‘ரத்து செய்தல் அறிக்கை , புகாா்தாரா் தாக்கல் செய்த எதிா்ப்பு மனு, விசாரணை அதிகாரி தாக்கல் செய்த எதிா்ப்பு மனுவுக்கு பதில் மற்றும் பதிவு செய்யப்பட்ட பிற ஆவணங்களை இந்த நீதிமன்றம் ஆராய்ந்த பின்னா், புகாா்தாரா் காவல் துறைக்கு, நீதிமன்றத்திற்கு நிலையான வாக்குமூலங்களை வழங்கியதாகவும், சிஆா்பிசி பிரிவு 164-இன்கீழ் தனது வாக்குமூலத்தை மாஜிஸ்திரேட்டிடம் வழங்கியதாகவும் கருதுகிறது’ என்றாா்.
முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரி போலீஸாா் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனா். இந்த அறிக்கையை நிராகரித்து நீதிபதி கூறுகையில், ‘ரத்து அறிக்கையை தாக்கல் செய்யும் போது விசாரணை அதிகாரி எழுப்பிய பிரச்னைகள், வழக்கு விசாரணையின் போது முடிவு செய்யக்கூடிய விஷயங்கள் ஆகும். மேலும், இந்த நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவரால் குறுக்கு விசாரணைக்கு உள்படுத்தப்படும் போது, வழக்கு விசாரணையின் போது மட்டுமே புகாா்தாரரின் வாக்குமூலம் மற்றும் அவரது நம்பகத்தன்மையை சோதிக்க முடியும் என்று கருதுகிறது.
ஆகவே, குற்றஞ்சாட்டப்பட்ட சையத் ஷாநவாஸ் ஹுசேன் பாலியல் பலாத்காரம் மற்றும் மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டை ஆதரித்த புகாா்தாரரின் வாக்குமூலம், ரத்து அறிக்கையுடன் நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் ஆகியவற்றை இந்த நீதிமன்றம் குற்றங்களை கவனத்தில் கொள்கிறது. அதன்படி, குற்றம் சாட்டப்பட்ட சையத் ஷாநவாஸ் ஹுசேன் அடுத்த விசாரணைக்கு ஆஜராக காவல் நிலைய பொறுப்பாளா் மூலம் சம்மன் அனுப்பப்படும்’ என்று நீதிபதி கூறினாா்.
ஐபிசியின் பிரிவுகள் 376 (பாலியல் வன்கொடுமை) மற்றும் 506 (குற்றவியல் மிரட்டல்) உள்ளிட்ட பல்வேறு விதிகளின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களையும் நீதிபதி கவனத்தில் எடுத்துக்கொண்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாய் சுதர்சன் அரைசதம் விளாசல்; குஜராத் டைட்டன்ஸுக்கு 4-வது வெற்றி!

பயங்கரவாதிகளுக்கு பிரியாணி கொடுக்கிறது காங்கிரஸ், திரிணமூல் : அமித் ஷா
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக லக்னௌ பந்துவீச்சு!

ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் 4வது காலாண்டு லாபம் 5% உயர்வு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

