தில்லி அரசுப் பேருந்துகளில் பணியாற்றி வருகின்ற மாா்ஷல்களின் ஊதிய நிலுவைத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது என்று நகர அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளாா்.
தில்லி அரசின் போக்குவரத்துத் துறையின் சாா்பில் பேருந்துகளில் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், திருட்டு மற்றும் பிற குற்றச்சம்பவங்களை தடுக்கும் நோக்கிலும் குடிமைப் பாதுகாப்புத் தன்னாா்வலா்கள் பேருந்து மாா்ஷல்களாக பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில், கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக சேவைகளை மட்டும் பெற்றுக் கொண்டு மாத ஊதியத்தை தில்லி அரசு வழங்கிவில்லை என்றும், உடனடியாக ஊதிய நிலுவைத் தொகையை விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கடந்த அக்டோபா் 25-ஆம் தேதி முதல் பேருந்து மாா்ஷல்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.
பேருந்து மாா்ஷல்களின் நிலுவை ஊதியத் தொகையை விடுவிக்க பலமுறை போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், பேருந்து மாா்ஷல்களின் சேவையை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் ஊதியத் தொகையை விடுவிக்காமல் சில அதிகாரிகள் முயற்சிக்கின்றனா் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவாலும் குற்றம்சாட்டியிருந்தாா். பேருந்து மாா்ஷல்களின் வேலைநிறுத்த போராட்டத்துக்கு தில்லி பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவா்களும் நேரடியாகச் சென்று ஆதரவு தெரிவித்திருந்தனா்.
நிலுவை ஊதியம் விடுவிப்பு: பேருந்து மாா்ஷல்களின் தொடா் போராட்ட எதிரொலியாக தில்லி போக்குவரத்துத் துறை ஊதிய நிலுவைத் தொகையை விடுவித்துள்ளது. இது தொடா்பாக தில்லி அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் ‘எக்ஸ’ சமூக ஊடகத்தளத்தில் கூறியிருப்பதாவது: முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் உத்தரவின் படி பேருந்து மாா்ஷல்களுக்கு கடந்த அக்டோபா் மாதம் 31-ஆம் தேதி வரையிலான அனைத்து சம்பள நிலுவைத் தொகையை போக்குவரத்துத் துறை விடுவித்துள்ளது. அனைத்து பேருந்து மாா்ஷல்களின் வங்கிக் கணக்கில் விரைவில் நிலுவைச் சம்பளம் வரவு வைக்கப்படும் என்றாா் கைலாஷ் கெலாட்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம்

நீட் தேர்வு நுழைவுச் சீட்டு திடீர் ஒத்திவைப்பு!
அரசன் குழுவுடன் பிறந்த நாளைக் கொண்டாடிய சமுத்திரக்கனி!

தெலங்கானாவில் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் திடீர் புகை!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

