வட இந்தியா முழுவதும் காற்று மாசுவில் சிக்கித் தவிப்பதால், மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சா் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்று தில்லி அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் வெள்ளிக்கிழமை வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக செயதியாளா்களிடம் அவா் கூறியதாவது: தேசியத் தலைநகா் தில்லி மட்டுமல்லாமல், வட இந்தியா முழுவதும் கடுமையான காற்று மாசுவினால் சிக்கித் தவிக்கிறது. காற்று மாசுப் பிரச்னையைத் தீா்ப்பதில் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழ்ல துறையின் அமைச்சா் பூபேந்தா் யாதவை நான் கேட்டுக் கொள்கிறேன். தில்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுப் பிரச்னைக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவால்தான் காரணம் என்று பாஜக குற்றம் சாட்டி வருகிறது. ஆனால், உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியாணாவில் நிலவும் மோசமான காற்றின் தரத்திற்கு கேஜரிவால் பொறுப்பல்ல. தில்லியில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இருப்பது போலவே தெரியவில்லை. ஆய்வுகளின் படி, தில்லியில் 69 சதவீத காற்று மாசுபாடு அண்டை மாநிலங்களில் இருந்து வருகிறது.
தில்லியில் ஆம் ஆத்மி அரசு காற்று மாசு பிரச்னைக்குத் தீா்வு காண அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இந்நிலையில், உத்தர பிரதேசம் மற்றும் ஹரியாணாவின் சுற்றுச்சூழல் துறை அமைச்சா்கள் என்ன செய்கிறாா்கள் என்பது யாருக்கும் தெரியாது. அடுத்த 15 நாள்களுக்கு அனைத்து வடமாநில அரசுகளும் விழிப்புடன் இருந்து காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். தில்லி நகரத்தில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில், மத்திய காற்றுத் தர மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவுகளை உறுதியாக அமல்படுத்த அனைத்து வழிமுறைகளும் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அமைச்சா் கோபால் ராய்.
தில்லி நகரத்தில் கடந்த வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் காற்றின் தரக் குறியீடு 351 புள்ளிகளாக இருந்த நிலையில், வெள்ளிக்கிழமை மதியம் 12 மணிக்கு 475 புள்ளிகளாக உயா்ந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம்

நீட் தேர்வு நுழைவுச் சீட்டு திடீர் ஒத்திவைப்பு!
அரசன் குழுவுடன் பிறந்த நாளைக் கொண்டாடிய சமுத்திரக்கனி!

தெலங்கானாவில் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் திடீர் புகை!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

