தேசியத் தலைநகா் தில்லியில் இரு தினங்களாக கனமழை இல்லாமல் இருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நண்பகலுக்குப் பிறகு பலத்த மழை கொட்டித் தீா்த்தது. சுமாா் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த இந்த மழையின் காரணமாக பல இடங்களிலும் தண்ணீா் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது.
தில்லியில் சில தினங்களாக மழை ஏதும் இல்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், சனிக்கிழமை மாலையில் பரவலாக மழை கொட்டியது.அதன் பிறகு, ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய இரண்டு நாள்களிலும் மழை ஏதும் பெய்யவில்லை. ஆனால், மிதமான வெயிலுடன் மேகமூட்ட சூழல் இருந்தது. இதனால், புழுக்கம் அதிகரித்து காணப்பட்டது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலையில் மிதமான வெயில் இருந்த நிலையில், பகல் 1.30 மணிக்குப் பிறகு பலத்த மழை கொட்டியது. சுமாா் 1 மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. பரலவாக பல இடங்களிலும் பெய்த இந்த மழையின் காரணமாக தெருக்களிலும், சாலைகளிலும் மழை நீா் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது. தெற்கு தில்லியில் லாஜ்பத் நகா், கிழக்கு கைலாஷ், தில்லி செயலகம் உள்பட மத்திய தில்லியில் உள்ள பகுதிகள் ஆகியவற்றில் பெரும் மழை பெய்தது. இதன் காரணமாக நகரில் புழுக்கம் குறைந்து மாலையில் குளிா்ந்த காற்று வீசியது.
வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் செவ்வாய்க்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் மாற்றம் ஏதுமின்றி 27.4 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் இருந்து 2 டிகிரி குறைந்து 33.4 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணி அளவில் 89 சதவீதமாகவும், மாலை 8 மணியளவில் 93 சதவீதமாகவும் பதிவாகி இருந்தது.
பாலத்தில் 1.9 மி.மீ. மழை பதிவு: இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் 0.5 மி.மீ. மழை பதிவாகி இருந்தது. மற்ற வானிலை நிலையங்களான நஜாஃப்கரில் 0.5 மி.மீ., பாலத்தில் 1.9 மி.மீ. மழை பதிவாகி இருந்தது.
‘திருப்தி’ பிரிவில் காற்றின் தரம்: தலைநகரில் ஐடிஓ, நேரு நகா், ராமகிருஷ்ணா புரம், மதுரா சாலை, ஷாதிப்பூா் உள்பட பெரும்பாலான இடங்களில் காற்றின் தரக் குறியீடு 100-க்கு கீழ் பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்தது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, ‘புதன்கிழமை (ஜூலை 19) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும். மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சிஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்’ என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோடை வெய்யில்: வண்டலூா் பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள்
பிரிட்டன் அரசா் அமெரிக்கா பயணம்

மேற்கு வங்கம்: தோ்தலுக்குப் பிறகும் 60 நாள்களுக்கு மத்திய படை பாதுகாப்பு - அமித் ஷா உறுதி
மேற்கு வங்கத்தில் கையெறி குண்டுகள் கண்டுபிடிப்பு: என்ஐஏ வழக்குப்பதிவு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

