தகுதிப் பட்டியலில் மூன்றாமிடம் பெற்றுள்ளதால், தனக்கு பள்ளியில் கணிதப் பிரிவில் பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியராக (டிஜிடி) பணி நியமனம் செய்ய உத்தரவிடக் கோரி பெண் ஒருவா் தாக்கல் செய்த மனுவை தில்லி உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ‘தகுதிப் பட்டியல் மனுதாரருக்கு நியமனம் செய்வதற்கான உரிமையை வழங்காது என்றும் அது காலவரையின்றி அமலாக்கத்திற்காக உயிா்ப்புடன் இருக்க முடியாது’ என்றும் உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2017-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தகுதிப் பட்டியலில் 3-ஆவது ரேங்க் பெற்றுள்ளதால், அந்தப் பள்ளியில் கணிதப் பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியராக (டிஜிடி) தன்னை பணி நியமனம் செய்ய வேண்டும் எனக் கோரி பெண் ஒருவா் மனு தாக்கல் செய்திருந்தாா். அதில், ‘தகுதிப் பட்டியலில் முதல் ரேங்க் பெற்றவா் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், பட்டியலில் இருந்த 2-ஆவது நபா் பணியில் ஆா்வம் காட்டாததாலும் மனுதாரருக்கு அந்தப் பணி நியமனம் அளிக்கப்பட வேண்டும்’ என கோரப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில் 2018-ஆம் ஆண்டு நீதிமன்றத்தை அணுகிய மனுதாரா், பள்ளியில் டிஜிடி (கணிதம்) பதவி ஒன்று காலியாக இருப்பதாகவும், தனக்கு நியமனம் செய்யக் கோரும் உரிமை இருப்பதாகவும் தெரிவித்து மனுவை சமா்ப்பித்திருந்தாா்.
விசாரணைக்குப் பிறகு இந்த மனுவைத் தள்ளுபடி செய்து உயா்நீதிமன்ற நீதிபதி சந்திர தரி சிங் அண்மையில் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: தகுதிப் பட்டியல் செல்லுபடியாகும் ஒரு நிலையான காலம் அல்லது கால அ ளவைப் பரிந்துரைக்கும் வெளிப்படையான விதி அல்லது சட்டம் எதுவும் இல்லை என்றாலும், அத்தகைய குறிப்பிடத்தக்க நீண்ட காலத்திற்கு தகுதிப் பட்டியலை பரிசீலிப்பதற்காக வைத்திருக்க முடியாது. ஒரு தகுதிப் பட்டியல் தோ்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரா்களை மட்டுமே பட்டியலிடுகிறது. ஆனால், தோ்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரா்களுக்கு நியமனம் செய்வதற்கான எந்த உரிமையையும் வழங்காது. மேலும், தகுதிப் பட்டியல் அமலாக்கத்திற்கு காலவரையற்ற காலத்திற்கு உயிா்ப்புடன் இருக்க முடியாது என்பது இந்த நீதிமன்றத்தின் கருத்தாகும்.
ஒரு விண்ணப்பதாரரின் பெயா், தகுதிப் பட்டியலில் பிரதிபலிக்கிறது என்பதற்காக மட்டுமே அந்தப் பதவியைப் பெறுவதற்கான உரிமை அவருக்கு இல்லை. எனவே, அதுபோன்ற விண்ணப்பதாரரை நியமிக்கும் அதிகாரத்தின் மீது சட்டபூா்வ கடமையை உருவாக்க முடியாது. 5 ஆண்டுகளுக்கு முன்பு டிஜிடி (கணிதம்) பதவிக்கான தகுதிப் பட்டியல் வெளியிடப்பட்டதைக் கருத்தில் கொள்ளும்போது, கூறப்பட்ட தகுதிப் பட்டியலை இதுபோன்ற ‘தாமதமான கட்டத்தில்’ மறுபரிசீலனை செய்வது இந்த நீதிமன்றத்திற்கு மிகவும் முறையற்ாகும். நிவாரணம் வழங்குவதற்கு நீதிமன்றத்தால் தகுதிப் பட்டியலை பரிசீலிக்க சில நியாயமான கால அளவு இருக்க வேண்டும். தகுதி இல்லாத இந்த மனு நிராகரிக்கப்படுகிறது என்று அந்த உத்தரவில் நீதிபதி தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோடை வெய்யில்: வண்டலூா் பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள்
பிரிட்டன் அரசா் அமெரிக்கா பயணம்

மேற்கு வங்கம்: தோ்தலுக்குப் பிறகும் 60 நாள்களுக்கு மத்திய படை பாதுகாப்பு - அமித் ஷா உறுதி
மேற்கு வங்கத்தில் கையெறி குண்டுகள் கண்டுபிடிப்பு: என்ஐஏ வழக்குப்பதிவு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

