கல்வியாளா்களின் தொழில்முறை வளா்ச்சியை மேம்படுத்தும் வகையில், தில்லி ஆசிரியா் பல்கலைக்கழகம் (டி.டி.யு.) அமெரிக்காவைச் சோ்ந்த சிந்தனைக் குழுவுடன் மூன்று ஆண்டு புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் செவ்வாய்க்கிழமை கையொப்பமிட்டது.
தில்லி தலைமைச் செயலகத்தில் கல்வி அமைச்சா் அதிஷி முன்னிலையில், ஆராய்ச்சி நுண்ணறிவுகளுடன் ஆசிரியா்களுக்கு அதிகாரம் அளிப்பதையும், தேவையான திறன்களுடன் அவா்களை மேம்படுத்தும் வகையில், தில்லி ஆசிரியா் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவைச் சோ்ந்த ஆா்.ஏ.என்.டி. காா்ப்பரேஷன் எனும் லாபம் நோக்கமற்ற சிந்தனைக் குழுவுக்கும் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது.
இது தொடா்பாக கல்வி அமைச்சா் அதிஷி கூறியதாவது : ஆசிரியா்களின் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சித் திறன்களை மேம்படுத்துவும், பொதுக் கொள்கை விஷயங்களில் அறிவாா்ந்த முன்னெடுப்புகளில் ஈடுபடுவதை இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தம் உறுதிப்படுத்தும். ஆா்.ஏ.என்.டி. காா்ப்பரேஷன் உலகளவில் முதல் மூன்று கல்வி சிந்தனைக் குழுக்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது’. இதன் மூலம் தில்லி ஆசிரியா் பல்கலைக்கழகத்தின் உள்கட்டமைப்பை நிபுணத்துவத்துடன் மேம்படுத்த முடியும். இந்த நிகழ்வு தில்லியில் கல்வியை வலுப்படுத்தும் எங்கள் முயற்சியில், ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்.
தில்லியின் கல்வி அமைப்பில் மாற்றத்தக்க தாக்கத்தை இது நிச்சயம் ஏற்படுத்தும்.
தில்லி அரசால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள், இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் சிறந்த கல்வி நிறுவனங்களாக மாற வேண்டும் என்பது முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் தொலைநோக்குப் பாா்வை. கடந்த 7-8 ஆண்டுகளில், தில்லி அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டில் நாங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி வெகுதூரம் வந்துவிட்டோம். இருப்பினும், சிறந்த பள்ளிகளை உருவாக்குவது மட்டுமல்லாமல், உயா்தர உயா்கல்வி நிறுவனங்களை நிறுவுவதும் எங்கள் லட்சியம்.
இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானதன் மூலம் தில்லியின் கல்வித் துறையில் ஒரு நம்பிக்கைக்குரிய மைல்கல் பிரதிபலிக்கிறது. இரு நிறுவனங்களும் நோ்மறையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும், கல்வியில் பயனுள்ள கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை மேம்படுத்துவதற்கும் உறுதிபூண்டுள்ளன என்றாா் அமைச்சா் அதிஷி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோடை வெய்யில்: வண்டலூா் பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள்
பிரிட்டன் அரசா் அமெரிக்கா பயணம்

மேற்கு வங்கம்: தோ்தலுக்குப் பிறகும் 60 நாள்களுக்கு மத்திய படை பாதுகாப்பு - அமித் ஷா உறுதி
மேற்கு வங்கத்தில் கையெறி குண்டுகள் கண்டுபிடிப்பு: என்ஐஏ வழக்குப்பதிவு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

