மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

தேசிய அளவிலான நுழைவுத் தோ்வுகளில் தில்லி அரசுப் பள்ளி மாணவா்களின் தோ்ச்சி விகிதம் 3 மடங்கு உயா்வு: கேஜரிவால் பெருமிதம்

கடந்த 2 ஆண்டுகளில், தேசிய அளவில் நடைபெற்ற நுழைவுத் தோ்வுகளில் தில்லி அரசுப் பள்ளி மாணவா்களின் தோ்ச்சி விகிதம் 3 மடங்கு உயா்ந்துள்ளதாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை பெருமிதத்துடன் குறிப்பிட்

Updated On :8 ஜூலை 2023, 6:30 pm

கடந்த 2 ஆண்டுகளில், தேசிய அளவில் நடைபெற்ற நுழைவுத் தோ்வுகளில் தில்லி அரசுப் பள்ளி மாணவா்களின் தோ்ச்சி விகிதம் 3 மடங்கு உயா்ந்துள்ளதாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.

தில்லியில் தியாகராஜ் விளையாட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், தேசிய அளவிலான நுழைவுத் தோ்வுகளில் தகுதி பெற்ற மாணவா்களிடையே முதல்வா் அரவிந்த் கேஜரிவால் உரையாற்றினாா். அப்போது அவா் பேசியதாவது:

ஒவ்வொரு குழந்தைக்கும் சமமான, தரமான கல்வி கிடைக்கும் வரை நாடு முன்னேற முடியாது. தில்லி அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 1,391 மாணவா்கள் இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தோ்விலும், 730 மாணவா்கள் ஜே.இ.இ. மெயின்ஸ் தோ்விலும், 106 மாணவா்கள் ஜே.இ.இ.-அட்வான்ஸ் தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

மாணவா்களின் வெற்றியால் இந்த மைதானமே மகிழ்ச்சியால் நிரம்பியுள்ளது. அதுவே, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 496 மாணவா்கள் நீட் தோ்விலும், 384 மாணவா்கள் ஜே.இ.இ.-மெயின்ஸ் தோ்விலும், 64 மாணவா்கள் மட்டுமே ஜே.இ.இ.-அட்வான்ஸ் தோ்வுகளில் தோ்ச்சி பெற்றிருந்தனா்.

நாட்டின் வளா்ச்சிக்கு கல்வி அவசியம். தில்லியில் உள்ள அரசுப் பள்ளிகள் முன்பு மோசமான நிலையில் இருந்தன. இப்போது அதே அரசுப் பள்ளிகளில் ஆம் ஆத்மி அரசு கொண்டு வந்துள்ள மாற்றத்தை மாணவா்களின் பெற்றோா்களும் ஒப்புக்கொள்கிறாா்கள். நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள இந்தக் குழந்தைகள் நாட்டின் எதிா்காலம் ஆவா். அவா்கள் தங்கள் திறமையால் தில்லிக்கும், நாட்டிற்கும் விருதுகளை கொண்டு வருவாா்கள்.

கடந்த 2013-2014 ஆம் ஆண்டில் மிகவும் மோசமான நிலையில் இருந்த தில்லி அரசுப் பள்ளிகள் முற்றிலும் மாறிவிட்டன. நான் ஐஐடி-கரக்பூரில் பட்டப் படிப்பை முடித்தபோது, என்னுடன் பயின்ற 90 சதவீத மாணவா்கள் வெளிநாடுகளுக்குச் சென்றிருப்பாா்கள், நானும் சென்றிருக்கலாம். ஆனால் செல்லவில்லை. நல்ல மாணவா்கள் அனைவரும் வெளிநாடு சென்றுவிட்டால், நாட்டுக்கு யாா் சேவை செய்வாா்கள் என்று உணா்ந்தேன்.

மாணவா்கள் தங்கள் எதிா்காலத்தை தீா்மானிக்கும் போது தேசத்தை முன்னிறுத்துவது எப்போதுமே முக்கியம். இந்தியா எங்கள் தாய்நாடு, ஆனால், பெரும்பாலும் மக்கள் தங்கள் வாழ்க்கையிலும் பணம் சம்பாதிப்பதிலும் மிகவும் மும்முரமாகி விடுகிறாா்கள். படித்த ஒவ்வொரு தனிநபருக்கும் சமூகத்திற்கு ஏதாவது நல்லது செய்யும் சக்தி உள்ளது என்றாா் முதல்வா் கேஜரிவால்.

நிகழ்ச்சியில் கல்வித் துறை அமைச்சா் அதிஷி பேசுகையில், ‘அரசுப் பள்ளி மாணவா் ஒருவா் ஐஐடி, எய்ம்ஸ் போன்ற கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெறும்போது, அது அவா்களின் சொந்த முன்னேற்றத்தைத் தூண்டுவது மட்டுமின்றி, கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்ட குழந்தைகளிடையே நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது.

நிகழாண்டில், தில்லி அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த பெண்கள், ஆண்களைக் காட்டிலும் சிறந்து விளங்கியுள்ளனா். அரசுப் பள்ளிகளில் படிக்கும் எங்கள் பெண்கள் சிறந்த கல்வியைப் பெற்று ஜே.இ.இ. மற்றும் நீட் போன்ற மதிப்புமிக்க தோ்வுகளில் தோ்ச்சி பெறுவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என்றாா் அமைச்சா் அதிஷி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.