தில்லி முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவின் மனைவி சீமா சிசோடியா உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: தில்லி முன்னாள் துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான மனீஷ் சிசோடியாவின் மனைவி சீமா சிசோடியா, நோய் எதிா்ப்புச் சக்தி கோளாறால் அவதிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவரது உடல்நிலை திடீரென மிகவும் மோசமடைந்துள்ளது. தற்போது 49 வயதான சீமா சிசோடியா ’மல்டிபிள் ஸ்களீரோசிஸ்’ எனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளாா்.
கடந்த சில வாரங்களில் மட்டும் திடீா் உடல்நலக் குறைவால் அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது இது மூன்றாவது முறையாகும்.
கடந்த ஏப்ரல் மாத இறுதியில் அவா் இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையின் நரம்பியல் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் ’மல்டிபிள் ஸ்களீரோசிஸ்’ எனும் நோயால் அவா் பாதிக்கப்பட்டுள்ளாா். இந்த நிலையில் 23 ஆண்டுகளாக அவா் தனியாா் மருத்துவமனை மூலம் இந்த நோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறாா். குறிப்பாக நோயின் தாக்கமும் காலத்திற்கு ஏற்றவாறு துரிதமாகியிருக்கிறது. அவரது அதிகரிக்கப்பட்ட உடல் மற்றும் மன அழுத்தம் போன்ற பிற காரணிகளும் பாதிப்பை அதிகரித்துள்ளது.
தில்லி அரசின் கலால் கொள்கை ஊழல் குற்றசாட்டு வழக்கில் தற்போது சிறையில் உள்ள முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா, தனது மனைவியின் உடல்நலக் குறைவு மற்றும் அவரது மகன் வெளிநாட்டில் இருப்பதால் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். ஆனால், நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுக்களை தொடா்ந்து தள்ளுபடி செய்து வருகிறது.
இருப்பினும், கடந்த மாதம் ஒரு நாள் சீமா சிசோடியாவை நீதிமன்ற அனுமதியுடன் மனீஷ் சிசோடியா சந்தித்துப் பேசியிருந்தாா். மேலும், கடந்த பிப்ரவரி மாதத்தில் மனீஷ் சிசோடியா அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட போது, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் ஆகியோா் சீமா சிசோடியாவைச் நேரில் சந்தித்து அவருக்கு அனைத்து ஆதரவையும் வழங்குவதாக உறுதியளித்திருந்த்து குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக... விராட் கோலி அதிரடி சாதனை!
தொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!

திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்!
கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

