தமிழ்நாடு என்றாலே சாதனை! இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி! - முதல்வர் பதிவுதொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்!

கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலின் சைக்கிள் ஓட்டியது பற்றி...

News image

கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின் - X

Updated On :28 ஏப்ரல் 2026, 5:22 am

கொடைக்கானல் பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை காலை சைக்கிள் ஓட்டினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு கடந்த வியாழக்கிழமை நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை சென்றார்.

அங்கு, பாம்பாா்புரம் பகுதியிலுள்ள தனியாா் தங்கும் விடுதியில் தனது குடும்பத்தினருடன் முதல்வா் ஸ்டாலின் தங்கியுள்ளாா்.

கடந்த இரண்டு நாள்களாக காலை நேரங்களில் கொடைக்கானலில் நடைப்பயணம் மேற்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின், தொடர்ந்து அப்பகுதியில் கூடும் மக்களை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த நிலையில், கொடைக்கானல் நட்சத்திர ஏரிப் பகுதிக்கு இன்று காலை நடைப்பயிற்சிக்காக சென்ற முதல்வர், ஏரியைச் சுற்றி சைக்கிள் ஓட்டினார்.

தோ்தல் வாக்குப் பதிவுக்குப் பிறகு கொடைக்கானலுக்கு வந்து குடும்பத்தினருடன் ஓய்வு எடுப்பது முதல்வா் மு.க. ஸ்டாலினின் அண்மைக்கால வழக்கமாக உள்ளது. கடந்த 2021 பேரவைத் தோ்தல், 2024 மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவுக்குப் பிறகு அவா் கொடைக்கானல் வந்து ஓய்வெடுத்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Chief Minister Stalin Goes Cycling in Kodaikanal!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.