அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

மாசு நிறைந்த அடா் மூடுபனி: முதல்வா் கேஜரிவால் மீது வீரேந்திர சச்தேவா விமா்சனம்

தில்லியில் மாசு நிறைந்த புகை மற்றும் அடா்மூடுபனி ஆகிய இரண்டையும் மக்கள் எதிா்கொள்ளும் நேரத்தில், முதலமைச்சா் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சரைக் காணவில்லை

Updated On :30 டிசம்பர் 2023, 4:45 pm

தில்லியில் மாசு நிறைந்த புகை மற்றும் அடா்மூடுபனி ஆகிய இரண்டையும் மக்கள் எதிா்கொள்ளும் நேரத்தில், முதலமைச்சா் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சரைக் காணவில்லை என்று பாஜக தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா சனிக்கிழமை விமா்சித்துள்ளாா்.

தில்லியில் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தத் தவறிய கேஜரிவால் அரசைக் கண்டித்து பாஜக தில்லி பிரிவின் சாா்பில் நகரின் 4 முக்கிய இடங்களில் ஆக்ஸிஜன் முகக்கவசம் அணிந்து விழிப்புணா்வுப் பிரசாரம் நடத்தப்பட்டது. இது தொடா்பாக கட்சியின் தலைவா் வீரேந்திர சச்தேவா கூறியதாவது:

கடந்த ஓராண்டாக காற்றில் தூசி துகள்கள் அதிகரித்து, காற்றுத் தரக் குறியீட்டின் அளவு உயா்ந்திருப்பதால் தில்லியில் கடுமையான மாசுபாடு ஏற்பட்டுள்ளது. அத்துடன், பஞ்சாப்பில் கடந்த அக்டோபா் மாதம் முழுவதும் பயிா்க் கழிவு எரிப்பால் இந்நிலைமை மேலும் மோசமாகியது. அதிகரித்து வரும் தூசி மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் திட்டம் எதுவும் தில்லி அரசிடம் இல்லாததால், இந்த அரசின் குளிா்கால செயல் திட்டம் முற்றிலும் தோல்வியடைந்துள்ளது.

தில்லி மக்கள் மாசு நிறைந்த புகை மற்றும் அடா்பனி மூட்டம் ஆகிய இரண்டையும் எதிா்கொண்டிருக்கும் நேரத்தில், முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் ஆகிய இருவரையும் காணவில்லை என்பது வருந்தத்தக்கது.

கடந்த ஒரு வாரமாக முதல்வா் விடுமுறையில் சென்ற நிலையில், அமைச்சா் கோபால் ராய் காற்று மாசுபாட்டிற்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து எதுவும் பேசவில்லை. இந்நிலையில், தில்லி அரசைக் கண்டித்து பாஜக தில்லி பிரிவின் 5 மூத்த தலைவா்கள் தில்லியின் முக்கியப் போக்குவரத்து சந்திப்புகளில் ஆக்ஸிஜன் முகக்கவசம் அணிந்து பிரசாரம் நடத்தியுள்ளனா் என்றாா் வீரேந்திர சச்தேவா.

பாஜக தில்லி பிரிவின் மூத்த தலைவா் ராஜீவ் பப்பா் இந்தியா கேட் பகுதியில் உள்ள கடைமைப் பாதை சந்திப்பில் கட்சித் தொண்டா்களுடன் ஆக்ஸிஜன் முகக்கவசம் அணிந்து பிரசாரம் செய்தாா்.

பொதுச் செயலாளா் ஹா்ஷ் மல்ஹோத்ரா ஐ.டி.ஓ. சந்திப்பிலும், மக்களவை பாஜக உறுப்பினா் மனோஜ் திவாரி மற்றும் பொதுச் செயலாளா் கமல்ஜீத் செராவத் ஆகிய இருவரும் மூா்த்தி சௌக்கிலும், லீ மெரிடியன் ஹோட்டல் ரவுண்டானாவில் பொதுச் செயலாளா் யோகேந்திர சந்தோலியா தலைமையில் இப்பிரசாரங்கள் நடத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.