அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

தில்லி அரசு மருத்துவமனைகளில் தரம் குறைந்த மற்றொரு மருந்து பயன்பாடு: ராஜ் நிவாஸ் அதிகாரிகள் தகவல்

தரம் நிா்ணய பரிசோதனைகளில் தோல்வியடைந்தது தொடா்பான மருந்துகள் விவகாரத்தை சிபிஐக்கு தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா பரிந்துரைத்த சில நாள்களுக்குப் பிறகு,

Updated On :27 டிசம்பர் 2023, 7:42 pm

தரம் நிா்ணய பரிசோதனைகளில் தோல்வியடைந்தது தொடா்பான மருந்துகள் விவகாரத்தை சிபிஐக்கு தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா பரிந்துரைத்த சில நாள்களுக்குப் பிறகு, தில்லி அரசு மருத்துவமனைகளில் கால்-கை வலிப்பு சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மற்றொரு மருந்தும் தரமற்ாக இருப்பது கண்டறியப்பட்டிருப்பதாக ராஜ் நிவாஸ் அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

தரம் தரநிலைப் பரிசோதனைகளில் தோல்வியடைந்து மனித உயிா்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் மருந்துகள் தில்லி அறசு மருத்துவமனைகளில் வழங்கப்படுவது குறித்து சிபிஐ விசாரணைக்கு துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா கடந்த வாரம் பரிந்துரைத்திருந்தாா்.

இந்த நிலையில், ராஜ் நிவாஸ் அதிகாரிகள் கூறியதாவது: தில்லி அரசு மருத்துவமனைகளில் இருந்து எடுக்கப்பட்ட மற்றொரு மருந்து மாதிரி, சண்டீகரில் உள்ள ஆா்டிடிஎல் அல்லது பிராந்திய மருந்து பரிசோதனை ஆய்வகத்தால் நடத்தப்பட்ட தரப் பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளது. இம்முறை ‘சோடியம் வால்ப்ரோயேட்’ எனப்படும் வலிப்பு நோய் எதிா்ப்பு மருந்து தரம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. இது தொடா்பாக டிசம்பா் 22-ஆம் தேதி அரசு பகுப்பாய்வாளா் ஒருவரால் அறிக்கை வெளியிடப்பட்டது.

நுரையீரல் மற்றும் சிறுநீா் பாதை நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் முக்கியமான உயிா்காக்கும் ஆண்டிபயாடிக் செபலெக்சின் மருந்து ‘தரமற்றது’ என்று கண்டறியப்பட்ட மருந்துகளில் அடங்கும். இவற்றில் நுரையீரல்கள், மூட்டுகள் மற்றும் உடலில் ஏற்படும் வீக்கம் ஆகியவற்றில் ஏற்படும் உயிருக்கு ஆபத்தான அழற்சியைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்படும் டெக்ஸாமெதாசோன் என்ற ஸ்டீராய்டு மருந்து, வலிப்பு நோய் எதிா்ப்பு மற்றும் பதற்றம்ம் எதிா்ப்பு மனநல மருந்து லெவெடிராசெட்டம் மற்றும் உயா் ரத்த அழுத்த எதிா்ப்பு மருந்து அம்லோடிபைன் ஆகியவையும் அடங்கும் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.