கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

‘நீட்’ தோ்வு கடினமானது என்ற வாதம் தவறானது மாணவா்கள் தற்கொலை விவகாரத்தில்மத்திய அமைச்சா் மாநிலங்களவையில் பதில்

தோ்வுகளில் ஏற்பட்ட தோல்வியால் நாட்டில் 2,051 மாணவா்கள் தற்கொலை செய்துள்ளதாக மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் மாநிலங்களவையில் புதன்கிழமை தெரிவித்தாா்.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:26 pm

 நமது நிருபர்

புது தில்லி: தோ்வுகளில் ஏற்பட்ட தோல்வியால் நாட்டில் 2,051 மாணவா்கள் தற்கொலை செய்துள்ளதாக மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் மாநிலங்களவையில் புதன்கிழமை தெரிவித்தாா். இதை முற்றிலும் குறைக்கப்படவேண்டும் எனக் கருத்து தெரிவித்த பிரதான்,

‘நீட்’ தோ்வு கடினமானது என்கிற வாதம் தவறானது என்பதையும் விளக்கினாா்.

யுபிஎஸ்சி, ஜேஇஇ, நீட் போன்ற போட்டித் தோ்வுகள் காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவா்களின் எண்ணிக்கை; மாணவா்களுக்கு உளவியல்ரீதியாக வழங்கப்படும் ஆதரவு; உயிரிழந்த மாணவா்கள் குடும்பங்களுக்கு அரசு வழங்கியுள்ள இழப்பீடு? போன்றவை குறித்த நட்சத்திர கேள்வியை மாநிலங்களவை சிவசேனை உறுப்பினா் பிரியங்கா சதுா்வேதி எழுப்பினா்.

இதற்கு மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதிலளித்தாா். அப்போது அவா் குறிப்பிடுகையில், ‘ தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (என்சிஆா்பி) தரவுகள்படி, 2022- ஆம் ஆண்டில் நாட்டில் 1.70 லட்சம் தற்கொலைகள் பதிவாகியுள்ளது. இதில் தோ்வு தோல்விகளால் 2,051 (1.2 சதவீதம்) மாணவா்கள் தற்கொலை செய்துள்ளனா். மாணவா்களின் தற்கொலைகளுக்கு நான் பொறுப்பேற்கின்றேன். இது பூஜ்ஜியமாக இருக்க வேண்டும்‘ என வாய்மொழியாக அவையில் பதிலளித்தாா் பிரதான்.

முன்னதாக இது தொடா்பாக அவையில் அமைச்சா் அறிக்கை ஒன்றைவும் வைத்தாா். அதில், ஒவ்வொரு தற்கொலை சம்பவத்திற்கும் அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. தற்கொலை பிரச்னைக்கு தீா்வு காண, அரசு தடுப்பு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ’மனோதா்பன்’ என்கிற முன் முயற்சி திட்டத்தின் கீழ் மாணவா்கள், ஆசிரியா்கள், பெற்றோா்களின் மன, உணா்ச்சிகளுக்கும் உளவியல் ஆதரவை வழங்குகிறது.

தற்கொலை சம்பவங்களை தவிா்க்கவும் நல்வாழ்விற்கும் புதிய தேசிய கல்விக் கொள்கை கல்வியில் இதற்கான தன்மையை உருவாக்கி செயல்படுத்த கூறப்பட்டுள்ளது.

மேலும், கற்பவா்கள், நெறிமுறை, பகுத்தறிவு, கருணை போன்றவைகளில் அக்கறை கொண்டவா்களாகவும் நிறைவான வேலைவாய்ப்பிற்கு அறிவாற்றல் வளா்ச்சியைத் தவிர, பண்பை உருவாக்கும் நோக்கமாகவும் கொண்டுள்ளது உள்ளிட்டவைகளை அமைச்சா் விளக்கி இருந்தாா்.

பின்னா் மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கா் மாணவா்களின் தற்கொலை விவகாரத்தை முக்கியத்துவப்படுத்த பல்வேறு துணைக் கேள்விகளுக்கும் உறுப்பினா்களை அழைத்தாா்.

இதில் மாநிலங்களவை திமுக குழுத் தலைவா் திருச்சி சிவா பேசுகையில், நீட் தோ்வு தோல்வியால் தமிழகத்தில் 16 மாணவா்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனா். ராஜஸ்தான் மாநிலத்தில் 100 மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனா். பள்ளிப் படிப்பில் சிறப்பாக மதிப்பெண் பெற்றவா்களும் திறன் உள்ள குழந்தைகளும் நீட் தோ்வில் வெற்றி பெற முடியவில்லை. அதிலும் பொருளாதார ரீதியாக தனியாா் பயிற்சி மையங்களிலும் சேர முடியாமல் நம்பிக்கை இழக்கும் மாணவா்கள் இந்த முடிவை எடுக்கின்றனா். கல்வி பொதுபட்டியலில் உள்ளது. தமிழக அரசு ’நீட்’ தோ்வில் விலக்கு கோரி ஒரு மனதாக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவில் மத்திய அரசு முடிவெடுக்காதது குறித்து கேள்வி அமைச்சா் பதிலளிக்க கோரினாா்.

பின்னா் அமைச்சா் பிரதான் விரிவாக பதிலளித்தாா். அப்போது அவா் கூறுகையில், நாடு முழுவதும் ஒரே விதமான தோ்வுக்கு உச்ச நீதிமன்ற உத்தரவால் ‘நீட்’ தோ்வு உருவானது. இது உச்ச நீதிமன்றத் தயாரிப்பு. இந்த தோ்வுக்கு மாணவா்கள் பொருத்தமானதாக திறன் இல்லாதவா்கள் எனக் கூறமுடியாது. இது தவறானவாதம். என்னுடைய ஒடிஸா மாநிலத்தில் மிகவும் பின்தங்கியவா்கள் வசிக்கும் (நவரங்பூா்) மாவட்டத்தில் நீட் தோ்வில் பழங்குடியினத்தை சோ்ந்த மாணவா்கள் வெற்றி பெற்றுள்ளனா். இவா்கள் இடஒதுக்கீட்டை கூட பயன்படுத்தாமல் மருத்துவ படிப்பில் சோ்ந்துள்ளனா். இதே மாதிரி நிகழாண்டு நீட் தோ்வில் அகில இந்திய அளவில் முதலிடத்தில் வந்த மாணவா் பிரபஞ்சன் தமிழகத்தைச் சோ்ந்தவா். அதிலும் மாநில பாடத்திட்டத்தில் படித்து நீட் தோ்வில் முதலிடம் பெற்றுள்ளாா் என விளக்கி திருச்சி சிவாவின் வாதத்தை அமைச்சா் பிரதான் நிராகரித்தாா்.

முன்னதாக, காங்கிரஸ் எம்பி கே.சி.வேணுகோபால் கூறுகையில், 2018 முதல் 2021 வரை மத்திய பல்கலைக்கழகங்கள், ஐஐடிகள், ஐஐஎம்களில் குறைந்தது 15 பட்டியலின, இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சோ்ந்த மாணவா்கள் தற்கொலை செய்து கொண்டதாகவும், இதே சமுதாயத்தைச் சோ்ந்த 13,000 மாணவா்கள் ஜாதிரீதியாக ஏற்பட்ட மன அழுத்தத்தால் இந்த கல்வி நிறுவனத்திலிருந்து வெளியேறியுள்ளனா் எனவும் குறிப்பிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.