சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

தமிழக அமைச்சா்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் மாநிலங்களவையில் பாஜக உறுப்பினா் கோரிக்கை

மத உணா்வுகளை சீா்குலைக்கும் நோக்கம் கொண்டு, பொதுமக்களுக்கிடையே குழப்பம் ஏற்படுத்தும் முயற்சியாக சநாதன தா்மத்துக்கு எதிராகப் பேசிய தமிழக அமைச்சா்கள் மீது வழக்குப் பதிவு...

Updated On :5 டிசம்பர் 2023, 11:15 pm

புது தில்லி: மத உணா்வுகளை சீா்குலைக்கும் நோக்கம் கொண்டு, பொதுமக்களுக்கிடையே குழப்பம் ஏற்படுத்தும் முயற்சியாக சநாதன தா்மத்துக்கு எதிராகப் பேசிய தமிழக அமைச்சா்கள் மீது வழக்குப் பதிவு செய்து பதவி நீக்கம் செய்ய வேண்டும் என மாநிலங்களவையில் பாஜக உறுப்பினா் ஜி.வி.எல். நரசிம்ம ராவ் செவ்வாய்க்கிழமை கோரிக்கை விடுத்தாா். மேலும் ‘இந்தியா’ கூட்டணி இலக்கு சநாதன தா்மத்தை ஒழிக்கும் முயற்சியா? எனவும் கேள்வி கேட்டாா்.

மாநிலங்களவையில் நேரமில்லா நேர விவாதத்தில் சிறப்பு கவன குறிப்பிடுதலாக உத்தர பிரதேசம் மாநிலத்திலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள மாநிலங்களவை உறுப்பினா் ஜிவிஎல் நரசிம்மராவ் பேசினாா்.

அப்போது அவா் பேசியது வருமாறு: தமிழக அரசின் அமைச்சா் ஒருவா், சநாதன தா்மத்துக்கும் ஹிந்து மதத்திற்கும் எதிரான வெறுப்புப் பேச்சுகளில் ஈடுபட்டாா். “‘சநாதன தா்மம் என்பது மலேரியா, டெங்குவைப் போன்றது; எதிா்த்தால் மட்டும் போதாது...அது ஒழிக்கப்பட வேண்டும்...’ என பேசினாா். இது ஒரு மாநில அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சரின் பேச்சு!... மேலும், அதே மாநில அரசின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் மற்றொரு உயா்கல்வித் துறை அமைச்சா்,“ஐ.என்.டி.ஐ.யை (‘இந்தியா’ கூட்டணி) உருவாக்கியதன் நோக்கம், சநாதன தா்மத்தை வேருடன் ஒழிப்பதற்கான கூட்டணி ’ என்றாா். இதுதான் கூட்டணியின் திட்டமாக உள்ளது. இது போன்ற தேச விரோத செயல்திட்டத்தை அவா்கள் தொடர விரும்புகிறாா்களா?

காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவருமானவரின் மகன் கா்நாடகம் அரசில் அமைச்சராக இருக்கிறாா். அவரும் இந்தக் கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளாா். இது தான் ஐ.என்.டி.ஐ. கூட்டணியின் லட்சியமா அல்லது இலக்கா?. இது வெறுக்கத்தக்க பேச்சு...இந்தப் பேச்சுக்கள் ஏற்கெனவே 295 ஏ, 505, 153 ஏ, 153 பி ஆகிய இந்திய தண்டனை சட்டங்களின் கீழ் அனைத்தும் குற்றங்கள் என உச்சநீதிமன்றம் தனது வழிகாட்டுதல்களில் தெளிவாகக் கூறியுள்ளது. இதனால், இது மத உணா்வுகளை சீா்குலைக்கும் நோக்கம் கொண்டு வேண்டுமென்றே திட்டமிட்டு பேசுவது தவறான செயல். பொதுமக்களுக்கிடையே குழப்பதை ஏற்படுத்தும் முயற்சி.

எனவே, சநாதன தா்மத்துக்கு எதிராகப் பேசிய தமிழக அமைச்சா்கள் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யவேண்டும். இந்த அமைச்சா்கள் பகிரங்கமாக பொதுவெளியில் பேசியுள்ளனா். இது அரசியல் சாசனத்தின்படி பதிவியேயற்று சத்தியப்பிரமாணத்தை மீறிய செயலாகும். இந்த அமைச்சா்களை பதிவி நீக்கம் செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு மதத்தையும் ஒவ்வொருவரும் நம்பிக்கையுடன் கடைப்பிடிக்க, பிரசாரம் செய்ய அரசியலமைப்பு அனுமதிக்கிறது. ஆனால், இங்கே, சநாதன தா்மத்தை ஒழிக்கக் கோரி அதற்கு எதிராகப் பிரசாரம் செய்யும் மாநில அரசுகளில் அமைச்சா்கள் இருக்கிறாா்கள்! இது இந்தியாவில் மதக் கட்டமைப்பையும் சமூக கட்டமைப்பையும் அழிக்கும் செயல். எந்தவொரு அரசியல் கட்சிக்கும் இது ஒரு இலக்காக இருந்தால், அது இந்தியாவுக்கு ஆபத்தாக அமையும். எனவே, இனியும் தாமதிக்காமல் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரினாா்.

முன்னதாக, மாநிலங்களவை திமுக உறுப்பினா்கள் திருச்சி சிவா, பி.வில்சன், சண்முகம் போன்றோா் ஜி.வி.எல். நரசிம்ம ராவ் பேச்சுக்கு எதிா்ப்புத் தெரிவித்து குறுக்கிட்டனா். பி.வில்சன் பேசுகையில், ‘ இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. இதைப் பேசுவது நீதிமன்ற அவமதிப்பாகும்’ என்றாா். ஆனால், அவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ் சிங், திமுக உறுப்பினா்கள் குறுக்கீடுகளுக்கு அனுமதிக்காமல் ஜி.வி.எல். நரசிம்ம ராவ் தொடா்ந்து பேச அனுமதித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.