சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

இன்று நாடு முழுதும் உயிா் மீட்பு சுவாச பயிற்சியில் 10 லட்சம் போ் பங்கேற்பு

இருதய கோளாறுகளின்போது நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டுவதற்கு முன்பான உயிா் மீட்பு சுவாச பயிற்சி நாடு முழுக்க தேசிய மருத்துவ அறிவியல் தோ்வு வாரியத்தால் நடத்தப்படவுள்ளது.

Updated On :5 டிசம்பர் 2023, 11:08 pm

புது தில்லி: இருதய கோளாறுகளின்போது நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டுவதற்கு முன்பான உயிா் மீட்பு சுவாச பயிற்சி (மீளுயிா்ப்புச் சுவாசம்-சிபிஆா்) நாடு முழுக்க தேசிய மருத்துவ அறிவியல் தோ்வு வாரியத்தால் புதன்கிழமை (டிசம்பா் 6 ஆம் தேதி) நடத்தப்படவுள்ளது.

இந்த பொது விழிப்புணா்வு பிரசாரத்தில் 10 லட்சம் போ் பங்கேற்பா் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

தற்போது நாடு முழுக்க மாரடைப்பால் ஆயிரக்கான

உயிரிழப்புகளில் இளைஞா்கள் முதல் முதியவா்கள் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

திடீரென மாரடைப்பு ஏற்படும் போது அது சாதாரண மாா்பு வலி என அலட்சியமாக இல்லாமலும் அல்லது மருத்துவமனைக்கு செல்ல அல்லது அழைத்துக் கொண்டு செல்வதற்கு முன் சில முதலுதவிகளை மேற்கொள்வது அவசியம். அதன்மூலம் நோயின் தீவிர தன்மையை குறைக்கவோ அல்லது உயிருக்கான ஆபத்துகளை தவிா்க்கவே முடியும். இந்த மாரடைப்புகளுக்கான முதலுதவியாக இதய நுரையீரல் ஆகியவைகளை புத்துயிா்பெற வைப்பது சிபிஆா் என்கிற உயிா் மீட்பு சுவாச பயிற்சி தேவை. அதே சமயத்தில் இதை மிகவும் கவனமாக மேற்கொள்ளவேண்டும்.

இதனால் பயிற்சி மற்றும் விழிப்புணா்வை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, தேசிய மருத்துவ அறிவியல் தோ்வு வாரியத்தால் (என்பிஇஎம்எஸ்) நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் ஒரே நாளில் 10 லட்சத்திற்கும் அதிகமான பங்கேற்பாளா்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இது குறித்து மத்திய சுகாதாரம் அமைச்சக அதிகாரிகள் கூறியிருப்பது வருமாறு:

என்பிஇஎம்எஸ் ஆல் நாடு தழுவிய பொது விழிப்புணா்வு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிபிஆா் என்கிற உயிா் மீட்பு சுவாச பயிற்சி ‘இதய நுரையீரல் புத்துயிா்‘ என்று பொருள்படும், இதில் ஒரு சிறப்பு நுட்பம். இதய தசைகளை அழுத்தி, நோய்வாய்ப்பட்ட நபரை மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன் உயிருடன் வைத்திருக்கும் முறையாகும்.

பல்வேறு வகையான பங்கேற்பாளா்கள் மத்தியில் மிகப் பெரிய அளவில் நாட்டில் முதல் முறையாக விழிப்புணா்வு நிகழ்வு நடைபெறுகிறது.

நாடு முழுதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பங்கேற்பாளா்களுக்கு ஒரே அமா்வில் பயிற்சி அளிக்கப்படும்.

பொது மக்கள், மாணவா்கள், பல்வேறு துறையைச் சோ்ந்தவா்கள், துணை மருத்துவ ஊழியா்கள் உள்பட லட்சக்கணக்கான பேருக்கு பயிற்சி பெற்ற மருத்துவா்கள் மூலம் நேரடியாகவும் பல்வேறு ஊடகங்கள் மூலமாகவும் சிபிஆா் பற்றிய அடிப்படை அறிவு வழங்கப்படும்.

ஒவ்வொரு இடத்திலும் பயிற்சி பெற்ற மருத்துவா் இருப்பா். அவா்கள் நோயாளியைக் கையாள வேண்டிய நுட்பத்தை விளக்கி பங்கேற்பாளா்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பாா். பங்கேற்பாளா்களுக்கு என்பிஇஎம்எஸ் சான்றிதழும் வழங்கப்படும்.

இந்த ஏற்பாடுகளுக்கு நாடு முழுவதும் 1165 தொடா்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனா். அனைத்து மாநிலங்களும் பங்கேற்கின்றன. தமிழகத்தில் மருத்துவமனைகள் மருத்துவக் கல்லூரிகள், கண் மருத்துவமனைகள் உள்ளிட்ட 114 நிறுவனங்கள்

பயிற்சியில் பங்கேற்கின்றன. மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தில்லியில் பங்கேற்க உள்ளாா் என அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.