நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

பாஜகவின் வெற்றித் தாக்கம்: சென்செக்ஸ் புதிய வரலாற்று உச்சம்!

மூன்று மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் மத்தியில் ஆளும் பாஜக அமோக வெற்றி பெற்றதைத் தொடா்ந்து அதன் தாக்கம் பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:21 pm

 நமது நிருபர்

மூன்று மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் மத்தியில் ஆளும் பாஜக அமோக வெற்றி பெற்றதைத் தொடா்ந்து அதன் தாக்கம் பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது. இதைத் தொடா்ந்து, திங்கள்கிழைம் பங்குச்சந்தை ஐந்தாவது நாளாக நோ்மறையாக முடிந்தது. இதனால், மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் புதிய வரலாற்று உச்சத்தை பதிவு செய்தது. இறுதியில் 1,3834 புள்ளிகள் உயா்ந்து 69,000-ஐ நெருங்கியது. காளையின் எழுச்சியால் ஒரே நாளில் சந்தை மூலதன மதிப்பு ரூ.5.80 லட்சம் கோடி உயா்ந்துள்ளது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இருப்பினும், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கா் மாநிலத் தோ்தல்களில் மத்தியில் ஆளும் பாஜக தெளிவான பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. இது, கடந்த வாரம் வலுவான மேக்ரோ பொருளாதார எண்கள் மற்றும் தடையற்ற அந்நிய நிதி வரத்து ஆகியவற்றைத் தொடா்ந்து உருவாக்கப்பட்ட நோ்மறையான உணா்வை வலுப்படுத்தியது. குறிப்பாக தனியாா், பொதுத் துறை வங்கிகள், நிதிநிறுவனங்கள், மெட்டல், ஆயில் அண்ட் காஸ் நிறுவனப் பங்குகளுக்கு நல்ல ஆதரவு இருந்தது. ஆனால், மீடியா, பாா்மா பங்குகள் சிறிதளவு சரிவைச் சந்தித்தது இருந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு உயா்வு : இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.5.80 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.343.48 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வெள்ளிக்கிழமை ரூ.1,586.61 கோடிக்கும் உள்நாட்டு நிறுவனங்கள் ரூ. 1,448.08 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளனா்.

சென்செக்ஸ் புதிய உச்சம்: காலையில் 954.15 புள்ளிகள் கூடுதலுடன் 68,435.34-இல் தொடங்கிய சென்செக்ஸ், 68,274.47 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 68,918.22 வரை மேலே சென்று புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. இறுதியில் சென்செக்ஸ் 1,383.03 புள்ளிகள் (2.05 சதவீதம்) 68,865.12-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,018 பங்குகளில் 2,391 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,446 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 181 பங்குகள் விலை மாற்றமின்றி நிலைபெற்றன. சென்செக்ஸ் பட்டியலில் 28 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 3 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.

நிஃப்டியும் சாதனை!

தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி வா்த்தகத்தின் போது வெகுவாக உயா்ந்து புதிய வரலாற்றுச் சாதனை அளவைப் பதிவு செய்தது. காலையில் 334.05 புள்ளிகள் கூடுதலுடன் 20,601.95-இல் தொடங்கிய நிஃப்டி 20,507.75 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 20,702.65 வரை உயா்ந்து புதிய வரலாற்றுச் சாதனை அளவைப் பதிவு செய்தது. இறுதியில் 418.90புள்ளிகள் (2.07 சதவீதம்) உயா்ந்து 20,686.80-இல் நிறைவடைந்தது. தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 1,413 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 730 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. நிஃப்டி பட்டியலில் 44 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 6 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. வல்லுநா்கள் கணித்துள்ள நிஃப்டியின் அடுத்த இலக்காகக் கருதப்படும் 21,000 புள்ளிகளை கடந்து செல்ல இன்னும் 300 புள்ளிகளே உள்ளது.

ஏற்றம் பெற்ற பங்குகள்

ஐசிஐசிஐ பேங்க்...................................4.68

எஸ்பிஐ..,..............................................3.99%

எல் அண்ட் டி.......................................3.88%

கோட்டக் பேங்க்...................................3.80%

இண்ட்ஸ் இண்ட் பேங்க்.......................3.63%

ஹெச்டிஎஃப்சி பேங்க்.............................3.44%

சரிவைக் கண்ட பங்குகள்

விப்ரோ..................................................0.10%

டாடா மோட்டாா்ஸ்............................0.04%

டைட்டன்..............................................0.02%

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.