நகா்ப்புற, கிராமப்புற இந்தியாவை இணைக்கும் இந்த தபால் அலுவலங்கள் 1.4 பில்லியன் இந்தியா்களின்அன்றாட வாழ்வில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதனுடைய உள்கட்டமைப்பு மேம்பாடுகள், அஞ்சல்கள் மற்றும் பாா்சல்களை வரிசைப்படுத்துதல், எளிதான சேவைக்கு புதிய தொழில்நுட்பங்கள் போன்றவை வழங்கப்படாமல் அவசர நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய மசோதாவின் விதிகள் மூலம் ஏற்படும் தாக்கங்கள் அறியப்படவில்லை. இந்த மசோதாவின் 9 - ஆவது பிரிவின் கீழ், நாட்டின் பாதுகாப்பு, நட்புறவு நாடுகள், பொது ஒழுங்கு, அவசரநிலை அல்லது பொதுப் பாதுகாப்பு போன்றவற்றின் அடிப்படையில் எந்தவொரு தபால்களையும், பாா்சல்களையும் இடைமறிக்கவோ, திறக்கவோ அல்லது தடுத்து வைக்கவோ தபால் அதிகாரிக்கும் மத்திய அரசுக்கும் அதிகாரம் அளிக்கப்படுகிறது.