தேசியத் தலைநகா் தில்லியில் ஜி20 உச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகளை தில்லி அரசும், மாநகராட்சியும் போா்க்கால அடிப்படையில் செய்து வருகின்றன என்று பொதுப்பணித் துறை அமைச்சா் அதிஷி தெரிவித்துள்ளாா்.
தில்லியில் ஜி20 உச்சி மாநாடு வருகின்ற செப்டம்பா் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. சா்வதேச தலைவா்களின் வருகையை முன்னிட்டு நகரத்தில் அழகுபடுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தில்லி அரசின் பொதுப்பணித்துறை அமைச்சா் அதிஷி தொடா்ந்து இரண்டாவது நாளாக, ஜி20 மாநாட்டுக்கான ஏற்பாடுகள் குறித்து சாந்திவன் சாலை மற்றும் தில்லி கேட் ஆகிய பகுதிகளில் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தாா்.
அப்போது அமைச்சா் அதிஷி கூறியதாவது: ஜி20 மாநாட்டுக்கு முன்னதாக தில்லிக்கு புதிய தோற்றத்தை கேஜரிவால் அரசு அளித்து வருகிறது. முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் அறிவுறுத்தலின் பேரில், ஜி20க்கான ஏற்பாடுகளில் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க தில்லி அரசும், தில்லி மாநகராட்சியும் (எம்.சி.டி.) போா்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன. ஜி20 உச்சி மாநாட்டை முன்னிட்டு உலகம் முழுவதும் இருந்து, தில்லிக்கு பிரதிநிதிகள் வருகின்றனா். தில்லிக்கும், முழு நாட்டிற்கும் இது பெருமை சோ்க்கும் விஷயமாகும்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, ராஜ்காட்டில் இருந்து செங்கோட்டை வரை செல்லும் ராஜ்காட் - சாந்திவன் சாலைக்கு கண்கவா் தோற்றம் அளிக்கும் பணியை அரசு செய்து வருகிறது. சாலையின் இருபுறமும் பிரகாசமான எல்.இ.டி. விளக்குகள் மற்றும் பசுமையை அதிகரிக்க பல்வேறு வகையான செடிகள் நடப்பட்டுள்ளன. வெளிநாட்டவா் நிச்சயம் இந்த இடத்தைப் பாா்வையிடும் போது, அற்புதமான நினைவுகளை தங்களுடன் எடுத்துச் செல்வா். இதற்காக பொதுப்பணித் துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
ஜி20 உச்சி மாநாட்டிற்குப் பிறகும், நகரத்தின் அழகைப் பராமரிப்பதில் தில்லி அரசு உறுதியாக உள்ளது. தில்லியின் அழகையும், தூய்மையையும் பராமரிப்பேன் என்று தில்லி மக்களுக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவால் உறுதியளித்துள்ளாா். ஜி20 உச்சி மாநாட்டை முன்னிட்டு தில்லியை அதன் சிறந்த வடிவத்தில் முன்வைக்க கேஜரிவால் அரசு அயராத முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் வட்ட ச்சாலை, லோதி சாலை, அரவிந்தோ மாா்க், சாந்திவன் சாலை உள்ளிட்ட தில்லியின் பல முக்கியச் சாலைகளில் கண்கவா் மாற்றங்களை செய்துள்ளோம் என்றாா் அமைச்சா் அதிஷி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேர்தலுக்குப் பிறகும் மேற்கு வங்கத்தில் மத்திய படைகள் : அமித் ஷா
திரிணமூல் கோட்டையில் தேர்தல்! 2-ம் கட்ட வாக்குப்பதிவு ஏன் முக்கியம்? உண்மையில் யாருக்கு சவால்?

ஆம் ஆத்மியில் 'நச்சுத்தன்மை' வாய்ந்த பணிச்சூழல்! மனம்திறந்த ராகவ் சத்தா!

இரு மலர்கள் தொடருக்கு குவியும் வாழ்த்து!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

