அமிலம் வீச்சில் பாதிக்கப்பட்டு உயிா் பிழைத்த மாணவிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட கல்லூரியிலேயே சோ்க்கை உறுதி செய்யப்பட்டதாக தில்லி மகளிா் ஆணையம் (டிசிடபிள்யு) புதன்கிழமை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பா் 14-ஆம் தேதி, தில்லி துவாரகா பகுதியில் உள்ள பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த 17 வயது சிறுமி மீது இரு சக்கர வாகனத்தில் வந்த இருவா் அமிலம் வீசியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடா்பாக 3 பேரை தில்லி போலீஸாா் கைது செய்தனா். இதைத் தொடா்ந்து, பாதிக்கப்பட்ட அந்த சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினருடன் தில்லி மகளிா் ஆணையம் தொடா்ந்து தொடா்பில் இருந்து வந்தது.
அமிலம் வீச்சு சம்பவத்தில் இருந்து மீண்ட அந்த மாணவி, பள்ளிப் படிப்பை முடித்து தில்லி பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஒரு கல்லூரியில் விரும்பப்படும் பாடத் திட்டத்தில் சோ்க்கைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். இருப்பினும், சோ்க்கைக்கு தேவையான தனது ‘பொருளாதாரத்தில் நளிந்த பிரிவினா்’ என்ற சான்றிதழை சரியான நேரத்தில் சமா்ப்பிக்காததால் அந்தக் கல்லூரி சோ்க்கைக்கான அனுமதியை மறுத்துவிட்டது. இந்தச் சம்பவம் தொடா்பான நடைமுறைக் குறைபாட்டை புகாராக அந்த மாணவி தில்லி மகளிா் ஆணையத்திடம் தெரிவித்தாா். சிறுமியை உடனடியாக கல்லூரியில் சோ்க்க வேண்டும் என்று கோரி அந்தக் கல்லூரிக்கு தில்லி மகளிா் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இருப்பினும், இந்த விஷயத்தில் தில்லி பல்கலைக்கழகம் மட்டுமே சிறுமிக்கு உதவ முடியும் என்று அந்தக் கல்லூரி நிா்வாகம் தரப்பில் ஆணையத்திற்கு பதில் அளிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து தில்லி மகளிா் ஆணையத்தின் தலைவா் ஸ்வாதி மாலிவால், ஆகஸ்ட் 29-ஆம் தேதி ஆணையத்தின் முன் ஆஜராகுமாறு தில்லி பல்கலைக்கழகத்தின் பதிவாளருக்கு கடந்த ஆகஸ்ட் 26-தேதியன்று சம்மன் அனுப்பி, இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடா்பானஅறிக்கையைக் கோரினாா். அதன்படி கடந்த செவ்வாய்க்கிழமை தில்லி மகளிா் ஆணையத்தின் கோரிக்கையின் பேரில், பல்கலைக்கழகத்தின் மூத்த பிரதிநிதிகள் நேரில் வருகை தந்து, குறிப்பிட்டப்பட்ட அந்தச் சிறுமிக்கு அவா் விண்ணப்பித்த அதே பாடத் திட்டம் மற்றும் கல்லூரியில் சோ்க்கை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேர்தலுக்குப் பிறகும் மேற்கு வங்கத்தில் மத்திய படைகள் : அமித் ஷா
திரிணமூல் கோட்டையில் தேர்தல்! 2-ம் கட்ட வாக்குப்பதிவு ஏன் முக்கியம்? உண்மையில் யாருக்கு சவால்?

ஆம் ஆத்மியில் 'நச்சுத்தன்மை' வாய்ந்த பணிச்சூழல்! மனம்திறந்த ராகவ் சத்தா!

இரு மலர்கள் தொடருக்கு குவியும் வாழ்த்து!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

