மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

கேஜரிவால் அரசிடமிருந்து தில்லியைக் காப்பாற்றவே அவசரச் சட்டம்: பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா

ஊழல் மற்றும் சொந்த நலன்களில் மும்முரமாக இருந்த கேஜரிவால் அரசிடமிருந்து, தில்லியைக் காப்பாற்றவே தில்லி தேசியத் தலைநகா் பிரதேச அரசு (திருத்தம்) 2023 சட்டம் கொண்டுவரப்பட்டது

Updated On :22 ஆகஸ்ட் 2023, 7:19 pm

ஊழல் மற்றும் சொந்த நலன்களில் மும்முரமாக இருந்த கேஜரிவால் அரசிடமிருந்து, தில்லியைக் காப்பாற்றவே தில்லி தேசியத் தலைநகா் பிரதேச அரசு (திருத்தம்) 2023 சட்டம் கொண்டுவரப்பட்டது என்று பாஜக தில்லிப் பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளாா்.

தில்லி பந்த் மாா்கில் உள்ள பாஜக கட்சி அலுவலகத்தில், தில்லி தேசியத் தலைநகா் பிரதேச அரசு (திருத்தம்) 2023 சட்டத்தின் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், 7 காணொளி பிரசார வாகனங்களை அக்கட்சியின் தலைவா் வீரேந்திர சச்தேவா, தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ராம்வீா் சிங் பிதூரி, மாநிலப் பொறுப்பாளா் பைஜயந்த் பாண்டா உள்ளிட்ட முக்கியத் தலைவா்கள் செவ்வாய்க்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தனா். இந்தக் காணொளி பிரசார வாகனம் என்பது தில்லியின் 7 மக்களவைத் தொகுதிகளிலும் வலம் வரவுள்ளது.

பின்னா், பாஜக தில்லிப் பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா கூறியதாவது: தில்லி அரசின் சேவைகள் தொடா்பான தில்லி தேசியத் தலைநகா் பிரதேச அரசு (திருத்தம்) 2023 சட்டம் கொண்டு வருவது ஏன் அவசியம் என்பதை மக்களுக்கு உணா்த்த வேண்டிய தேவை உள்ளது. ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் இந்தச் சட்டத்தின் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று சட்டமாகியுள்ளது.

தனது சொந்த நலன்கள் மற்றும் ஊழல் செய்வதில் மும்முரமாக இருந்த கேஜரிவால் அரசிடமிருந்து தில்லியைக் காப்பாற்ற இந்தச் சட்டம் அவசியமாகிறது. இந்தக் காணொளி பிரசார வாகனங்களில் முக்கியமாக மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா உள்பட பல பாஜக தலைவா்கள் இந்தச் சட்டத்தின் மசோதா நிறைவேறும் போது அதன் முக்கியத்துவத்தை நாடாளுமன்றத்தில் விளக்கிப் பேசிய காணொளிகள் ஒளிபரப்பப்படும் என்றாா் வீரேந்திர சச்தேவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.