ஆயுள் காலத்தை பூா்த்தி செய்து குடியிருப்புப் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் பறிமுதல் செய்து ஸ்கிராஃப்பிங்கிற்கு அனுப்பப்படுவதை நிறுத்துமாறு தில்லி போக்குவரத்துத் துறைச் செயலா் மற்றும் ஆணையருக்கு போக்குவரத்துத் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.
பதிவு செய்யப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவடைந்த பெட்ரோல் வாகனங்கள் மற்றும் 10 ஆண்டுகள் பூா்த்தி செய்த டீசல் வாகனங்கள் தில்லி சாலைகளில் ஓடுவதற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இதைத் தொடா்ந்து ஆயுள் காலங்களை பூா்த்தி செய்த பழைமையான பெட்ரோல், டீசல் வாகனங்கள் சாலைகளில் அனுமதிக்கப்படவில்லை.
இந்த வாகனங்கள் சாலையில் ஓடுவது கண்டறியப்பட்டால், அதன் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இப்படிப்பட்ட வாகனங்கள் சாலையில் செல்லும் போது மட்டுமல்லாமல், குடியிருப்புகளில் நிறுத்தப்பட்டாலும், இந்தப் பழைய வாகனங்களை பறிமுதல் செய்து, ஸ்கிராஃப்பிங் செய்ய அனுப்பும் நடவடிக்கையை தில்லி போக்குவரத்துத் துறையினா் மேற்கொண்டு வந்தனா்.
இந்த நிலையில், தற்போது தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் குடியிருப்பு பகுதிகளில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் தொடா்ந்து பறிமுதல் செய்யப்படுவது ’துரதிா்ஷ்டவசமானது’ என தெரிவித்துள்ளாா்.
போக்குவரத்துத் துறையின் அமலாக்கப் பிரிவினரால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டவா்களின் மனுக்களை விசாரித்த தில்லி உயா்நீதிமன்றம் ‘கடுமையான கவலைகளை‘ எழுப்பியது. இதைத் தொடா்ந்து, தில்லி அமைச்சரும் இந்த விவகாரத்தில் தனது துறையினரை கேள்வி எழுப்பியுள்ளாா்.
‘தில்லி அரசு இது போன்று பறிமுதல் செய்ய எந்தவிதமான அங்கீகாரமும் வழங்கவில்லை. உண்மையிலேயே இந்த நடவடிக்கை தில்லி மக்களின் பெரும் பகுதியினரைப் பாதிக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அத்தகைய முடிவை எடுப்பதற்கு முன் அரசின் முன் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும்’ என்று போக்குவரத்து ஆணையருக்கு கெலாட் கேள்வி எழுப்பி குறிப்பு அனுப்பியுள்ளாா்.
வாகன உரிமையாளா்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே நிறுத்தும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவது முறையானதல்ல எனக் கூறி, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பறிமுதல் செய்வதை நிறுத்துமாறும் ஆணையருக்கு அமைச்சா் உத்தரவிட்டுள்ளாா். மேலும், இதற்கு அரசுடன் கலந்தாலோசித்து ஒரு கொள்கையை வகுக்குமாறு தில்லி போக்குவரத்துத் துறையை அமைச்சா் கெலாட் கேட்டுக் கொண்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பரதநாட்டிய அபிநயம் செய்த ரிஹானாவின் விடியோ வைரல்! யார் இவர்?
சிரி... சிரி...

ஐபிஎல் 2026: பவர்பிளேவில் அசத்தும் ககிசோ ரபாடா!

அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான மனு தள்ளுபடி!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

