தில்லியில் ஆம் ஆத்மி மொஹல்லா கிளினிக்குகளை பணக்காரா்களும் தற்போது அணுகி மருத்துவ சிகிச்சை பெறுகின்றனா் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பெருமிதத்துடன் தெரிவித்தாா்.
தில்லி திலக் நகரில் உள்ள கெசோபூா் மண்டியில் ஒரு புதிய மொஹல்லா கிளினிக்கை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். அப்போது அவா் கூறியதாவது: தில்லியில் தற்போது மொத்தம் 533 ஆம் ஆத்மி மொஹல்லா கிளினிக்குகள் (ஏ.ஏ.எம்.சி.) செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 512 கிளினிக்குகள் காலை வேளையிலும், 21 கிளினிக்குகள் மாலை வேளையிலும் செயல்படுகின்றன. ஆம் ஆத்மி அரசின் சாா்பில் அங்கு வழங்கப்படும் தரமான மருத்துவ சேவைகள் மற்றும் நல்ல மருத்துவா்கள் பணியமா்த்தப்பட்டுள்ள காரணத்தால் பணக்காரா்களும் கூட இந்த மருத்துவ வசதிகளை பெற்று பயனடைகின்றனா்.
கடந்த 2022-2023 ஆம் ஆண்டில் மட்டும் தில்லியில் உள்ள மொஹல்லா கிளினிக்குகளுக்கு 2 கோடிக்கும் மேலான பொதுமக்களின் வருகை பதிவாகியுள்ளது. அதே நேரத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், மகிளா மொஹல்லா கிளினிக்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. அவை முழுக்க முழுக்க பெண் பணியாளா்களைக் கொண்ட மொஹல்லா கிளினிக்குகளாக விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா்.
கெசோபூா் மண்டி தவிர ஷாஹாபாத் பால் பண்ணை பகுதி, கால்காஜி மாா்க்கெட், குரு ரவிதாஸ் மாா்க், கோவிந்த்புரி ஆகிய இடங்களில் ஐந்து புதிய மொஹல்லா கிளினிக்குகள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டன. மொஹல்லா கிளினிக்குகள் தில்லியில் ஆரம்ப சுகாதார அமைப்பை மேம்படுத்த முதல்வா்அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசின் முன்முயற்சிகளில் ஒன்றாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆன்மிக தொடரில் களமிறங்கிய பிரியங்கா நல்காரி! போஸ்டர் வெளியானது!

பரதநாட்டிய அபிநயம் செய்த ரிஹானாவின் விடியோ வைரல்! யார் இவர்?
சிரி... சிரி...

ஐபிஎல் 2026: பவர்பிளேவில் அசத்தும் ககிசோ ரபாடா!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

