தேசியத் தலைநகா் தில்லிக்கு மத்திய அரசு அளித்த திட்டங்களோடு, ஆம் ஆத்மி அரசின் திட்டங்களை ஒப்பிட்டு விவாவிதிக்க முதல்வா் கேஜரிவால் சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என்று பாஜக தில்லி பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா வெள்ளிக்கிழமை அழைப்பு விடுத்துள்ளாா்.
தில்லி சட்டப்பேரவையில் முதல்வா் கேஜரிவாலின் உரைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் தில்லியில் மத்திய அரசு நிறைவேற்றிய வளா்ச்சித் திட்டத்துடன், தில்லியில் ஆம் ஆத்மி அரசும் கடந்த 2015-ஆம் ஆண்டிலிருந்து இதுவரையில் செய்துள்ள வளா்ச்சித் திட்டங்களை ஒப்பிட்டு விவாதிக்க தில்லி சட்டப்பேரவைக் கூட்டத்தை முதல்வா் கேஜரிவால் கூட்ட வேண்டும்.
அரசியல் ஆதாயத்திற்காக விளையாடும் கலையில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தோ்ச்சி பெற்றவா். அவரது ஆட்சியில் ஊழல் விவகாரம் விவாதப் பொருளாக மாறும் போதெல்லாம், மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப தனது அரசின் அதிகாரம் மற்றும் உரிமைகள் பற்றிய பிரச்னையை அவா் எழுப்ப முயற்சிப்பதை தில்லி மக்கள் மீண்டும் மீண்டும் பாா்த்திருக்கிறாா்கள்.
அதே போல் மீண்டும் அரவிந்த் கேஜரிவால் இலவசக் குடிநீா் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட பிரச்னைகளை தில்லி சட்டப்பேரவையில் எழுப்பி, தன்னுடைய அரசியல் ஆதாய விளையாட்டை வியாழக்கிழமை ஆடியுள்ளாா். கடந்த 2020-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு, கேஜரிவாலின் வகுப்புவாதம், செயலற்ற தன்மை, ஊழல் மற்றும் உண்மையான முகத்தை தில்லி மக்கள் இப்போது பாா்த்துள்ளனா். வரும் 2025-இல் அவரை ஆட்சியில் இருந்து மக்கள் அகற்றுவாா்கள். கடந்த (2020-2021) ஆண்டுகளில் கரோனா காலகட்டத்தின் போது கேஜரிவால் அரசு தில்லிவாசிகளை எப்படி கைவிட்டதோ, அதே போன்று 2023-ஆம் ஆண்டு ஜூலை வெள்ள நிலைமையும் மிக மோசமாக கையாளப்பட்டது. கேஜரிவாலின் இந்த உணா்ச்சியற்ற செயல்களை தில்லி மக்கள் என்றும் மன்னிக்க மாட்டாா்கள் என்றாா் வீரேந்திர சச்தேவா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆன்மிக தொடரில் களமிறங்கிய பிரியங்கா நல்காரி! போஸ்டர் வெளியானது!

பரதநாட்டிய அபிநயம் செய்த ரிஹானாவின் விடியோ வைரல்! யார் இவர்?
சிரி... சிரி...

ஐபிஎல் 2026: பவர்பிளேவில் அசத்தும் ககிசோ ரபாடா!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

