இல்லம் தோறும் குடிநீர் இணைப்பு திட்டங்களில் பணியாற்றிய 25 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் தில்லி செங்கோட்டை சுதந்திர தின நிகழ்ச்சியில் "சிறப்பு விருந்தினர்களாக' கலந்து கொண்டனர். அவர்களை மத்திய ஜல் சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கெளரவித்தார்.
நாட்டின் 77-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடியின் உரையை கேட்க நாடு முழுவதிலுமிருந்து 'சிறப்பு விருந்தினர்கள்' அழைக்கப்பட்டிருந்தனர். இதில் 50 பேர் "ஜல் ஜீவன் மிஷன்' திட்டத்தை செயல்படுத்துபவர்கள்.
"ஜன் பகிதாரி' (மக்களின் பங்களிப்பு) முன் முயற்சிகளை அங்கீகரிக்கவும் ஜனநாயக முறையில் தேசத்தைக் கட்டமைப்பதில் பங்களித்த 'சாமானிய மக்களுக்கு' நன்றி தெரிவிப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த ஏற்பாடுகளை மத்திய அரசு செய்திருந்தது.
ஜல்சக்தி அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த விழாவில், 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 50 சிறப்பு விருந்தினர்களை மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினார். இந்த நிகழ்வு சிஜிஓ வளாக அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இவர்கள் மத்தியில் ஷெகாவத் பேசியதாவது:
பிரதமர் மோடி, தண்ணீரின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, ஒருங்கிணைந்த ஜல்சக்தி அமைச்சகத்தை உருவாக்கினார். இதில் நீர் தொடர்பான அனைத்து விவகாரங்களிலும் பணியாற்றத் தொடங்கினோம். கடந்த 2019, ஆகஸ்ட் 15-இல் பிரதமரால் செங்கோட்டையிலிருந்து இல்லம் தோறும் குடிநீர் திட்டம் அறிவிக்கப்பட்டது. தற்போது 4 -ஆவது ஆண்டை நிறைவு செய்துள்ளது. இந்த நீண்ட பயணத்தில், 12.83 கோடி (66.73%) மக்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.
இது நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு கிராமப்புற குடும்பங்களின் துன்பங்களுக்கு இந்த இயக்கம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஒவ்வொரு வீட்டுக்கும் சுத்தமான நீர் சென்றடைவதை உறுதி செய்வதற்கு குடிநீர்த் துறையில் உலகின் எந்த நாடும் செய்யாத மிகப்பெரிய முதலீடாக ஜல் ஜீவன் மிஷனின்கீழ் ரூ.2.00 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது என்றார் அமைச்சர்.
இந்த நிகழ்வில் ஜல் சக்தி மற்றும் உணவு பதப்படுத்துதல் தொழில்துறை இணையமைச்சர் பிரகலாத் சிங் படேல், மத்திய குடிநீர், தூய்மைத் துறை செயலாளர் வினி மகாஜன் ஆகியோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆன்மிக தொடரில் களமிறங்கிய பிரியங்கா நல்காரி! போஸ்டர் வெளியானது!

பரதநாட்டிய அபிநயம் செய்த ரிஹானாவின் விடியோ வைரல்! யார் இவர்?
சிரி... சிரி...

ஐபிஎல் 2026: பவர்பிளேவில் அசத்தும் ககிசோ ரபாடா!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


