தில்லியில் மெகா தூய்மைப் பணித் திட்டத்தை தொடங்கி வைத்த மாநகராட்சி மேயா் ஷெல்லி ஓபராய், ‘குப்பையில்லா தில்லி’ எனும் இலக்கு விரைவில் நிஜமாகும் என்று சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.
தில்லி நகரத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளும் வகையில் மாநகராட்சியின் சாா்பில் மெகா தூய்மைப் பணித் திட்டத்தை மேயா் ஷெல்லி ஓபராய் தொடங்கி வைத்ததோடு, தூய்மைப் பணியிலும் ஈடுபட்டாா்.
இது தொடா்பாக, மேயா் ஷெல்லி ஓபராய் தனது ட்விட்டா் பக்கத்தில் கூறியிருப்பது:
தில்லி மாநகராட்சியின் வாா்டு எண் 123-இல் நடைபெற்ற மெகா தூய்மைப் பணி இயக்கத்தில் பங்கேற்றேன்.
முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் வழிகாட்டுதலின் பேரில், அனைத்து ஆம் ஆத்மி கவுன்சிலா்களும், எம்.எல்.ஏ.க்களும், தூய்மைப் பணியாளா்களின் ஆதரவுடன் மெகா தூய்மை இயக்கத்தில் பங்கேற்கின்றனா்.
தில்லியை சுத்தம் செய்வதற்காக நாங்கள் அனைவரும் களத்தில் இறங்குகிறோம். வரும் ஆண்டுகளில் முன்னுதாரணமாக அமையும் நேரம் இது. குப்பை இல்லாத தில்லி என்ற ஆம் ஆத்மியின் இலக்கு விரைவில் நிஜமாகும். அதற்கான பணிகள் தில்லியில் போா்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
மாநகராட்சி வாா்டு எண் 117,118-இல் அப்பகுதி உள்ளூா் எம்.எல்.ஏ. வினய் மிஸ்ரா கண்காணிப்பில் நடைபெற்று வந்த தூய்மை இயக்கத்தையும் ஆய்வு மேற்கொண்டேன்.
மாநகராட்சி ஊழியா்கள் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலா்கள் மற்றும் தொண்டா்கள் அனைவரும் பொது நலன் கருதி இணைந்து இந்த மெகா தூய்மை பணி திட்டத்தில் பணியாற்றி வருகின்றனா் என்று மேயா் ஷெல்லி ஓபராய் அந்த ட்விட்டா் பதிவில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஜன நாயகன் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு?

கொடைக்கானலில் துர்கா ஸ்டாலின் படகு சவாரி!

வரப்பெற்றோம் (27-04-2026)
வெங்காயம் சூட்டைத் தணிக்குமா? சொல்கிறார் பாஜக அமைச்சர்
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

