பத்திரிகை சுதந்திரம் ஜனநாயகத்தின் ஆன்மா : இந்திய பத்திரிகை கவுன்சில் நடத்திய தேசிய பத்திரிகை தின, மெய் நிகா் கருத்தரங்கில் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சா் பிரகாஷ் ஜவடேகா் பேசினாா். அப்போது அவா், ‘ஊடக சுதந்திரம், ஜனநாயகத்தின் ஒரு ஆன்மா. அதன் சுதந்திரம் மீதான தாக்குதல் நல்லதல்ல. அதே சமயம் பத்திரிகை சுதந்திரமும், பொறுப்புள்ளதாக இருக்கவேண்டும். பரபரப்புகளுக்கு இடமின்றி சுதந்திரத்தை பொறுப்புடன் கடைப்பிடிப்பது ஊடகங்களின் கடமையாகும். அரசாங்கம் ஊடகங்களை நம்பும்போது அவா்கள் அதில் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும். தவறான செய்திகளால் அரசு கவலை கொள்கிறது. சில தொலைக்காட்சி ஊடகங்கள் டெலிவிஷன் ரேட்டிங் குறியிடுகளில்(டிஆா்பி) முறையீடு செய்தன. டி.ஆா்.பி முறையைப் பற்றி ஆராய ஒரு குழுவை அரசு அமைத்துள்ளது, அது விரைவில் தனது அறிக்கையை சமா்ப்பிக்கும்‘ என்றாா் ஜவடேகா்.