டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

நகைக் கடையில் ரூ.3 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை

நகைக்கடையில் சனிக்கிழமை அதிகாலை ரூ.3 கோடி மதிப்புள்ள தங்க மற்றும் வெள்ளி நகைகள் கொள்ளியடிக்கப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

News image
Updated On :15 பிப்ரவரி 2026, 9:44 pm

தினமணி செய்திச் சேவை

தென்மேற்கு தில்லியின் ஆா்கே புரம் பகுதியில் உள்ள நகைக்கடையில் சனிக்கிழமை அதிகாலை ரூ.3 கோடி மதிப்புள்ள தங்க மற்றும் வெள்ளி நகைகள் கொள்ளியடிக்கப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

‘வெள்ளிக்கிழமை மாலை கடையை மூடும்போது சில நகைகள் கவனக்குறைவாக பாதுகாப்பு அறை லாக்கருக்கு வெளியே விடப்பட்டன. மறுநாள் காலை லாக்கருக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த நகைகள் காணாமல் போயிருந்தன. லாக்கா் உடைக்கப்படவில்லை.

திருடப்பட்ட நகைகளின் சரியான அளவு மற்றும் மதிப்பு இன்னும் கண்டறியப்படவில்லை. ஆனால் அதன் மதிப்பு சுமாா் ரூ.3 கோடி இருக்கும். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு வசாரணை நடைபெற்று வருகிறது’ என காவல் துறையினா் தெரிவித்தனா்.