புது தில்லி, ஏப். 10: இலங்கையில் தமிழர் பகுதியில் மேற்கொள்ளப்படும் மறுவாழ்வுப் பணிகளைப் பார்வையிடச் செல்லும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுத் தேர்வில் பாரபட்சம் காட்டப்படவில்லை என்று நாடாளுமன்ற விவகார அமைச்சர் பவன்குமார் பன்சல் தெரிவித்தார்.
இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலையை நேரில் கண்டறிய 15 பேர் கொண்ட குழு வரும் 16-ம் தேதி அந்நாட்டுக்குச் செல்ல உள்ளது. ஏப்ரல் 21-ம் தேதி வரை இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யும் இக்குழுவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமை தாங்குகிறார்.
பல்பீர் புன்ஜ் (பாஜக), பிரகலாத் வெங்கடேஷ் ஜோஷி (பாஜக), எம். கிருஷ்ணசாமி, மாணிக்க தாகூர், என்.எஸ்.வி. சித்தன், சுதர்சன நாச்சியப்பன், ஜெ.டி. சீலம் (ஐவரும் காங்கிரஸ்), டி.கே. ரங்கராஜன் (மார்க்சிஸ்ட்), சுசாரு ரஞ்சன் ஹல்தர் (திரிணமூல் காங்கிரஸ்), ரபி பெர்னார்ட் (அ.தி.மு.க.), டி.கே.எஸ். இளங்கோவன் (தி.மு.க.), சிவானந்த் திவாரி (ஐக்கிய ஜனதா தளம்), சைலேந்திர குமார் (சமாஜவாதி), சிதானந்த் மஹாபத்ரா (பிஜு ஜனதா தளம்) ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும், தமிழகத்தைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒரே உறுப்பினரான தொல். திருமாவளவனும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், இலங்கை செல்லும் குழுவில் தாங்களும் இடம்பெற வேண்டும் என்று அவர்கள் கோரி வருகின்றனர். இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் சமீபத்தில் நாடாளுமன்ற விவகார அமைச்சர் பவன் குமார் பன்சலிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால், அது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், தில்லி பிரகதி மைதானில் "நீர் எக்ஸ்போ 2012' என்ற சர்வதேச கண்காட்சியை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்த மத்திய அமைச்சசர் பவன் குமார் பன்சலிடம் இது குறித்து "தினமணி' செய்தியாளர் கேட்டபோது அவர் கூறியதாவது:
நாடாளுமன்றத்தில் உள்ள கட்சிகளின் உறுப்பினர் பலத்தின் அடிப்படையில்தான் இலங்கைக்குச் செல்லும் நாடாளுமன்றக் குழுவில் இடம்பெறும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
எல்லோரையும் குழுவில் சேர்ப்பது இயலாத காரியம். அந்த வகையில் விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் உறுப்பினர்கள் பட்டியலில் இடம்பெறாமல் இருந்திருக்கலாம். இலங்கை செல்லும் எம்.பி.க்கள் குழுவின் பட்டியல் இறுதிப்படுத்தப்பட்டு விட்டதா என்பது எனக்குத் தெரியாது'' என்று பன்சல் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் யாராலும் ஊடுருவ முடியாது: அமித் ஷா

ஆயுஷ் மாத்ரேவுக்கு மாற்று வீரர் அறிவிப்பு!
ஜனநாயகக் கடமையில் அரசியல் தலைவர்கள்!

தேர்தலைப் புறக்கணித்த வேங்கைவயல் மக்கள்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

